பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588


"தாதுமல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற தழல்புரை எழில்நோக்கிப் - பேதை வண்டுகள் எரிவன வெருவரும்” - என நெருப் பைப் போலும் இதன் மலரைப் பார்த்த வண்டுகள் மரம் எரிவ தாக அஞ்சும்’ என்று பாடினார். இவற்றால் செயலை மலரின் சிவப்பையும் மெருகையும் அறியலாம். இதன் நிறவளர்ச்சி காந்தள்போன்று மாற்றங்கொண்டது, அரும்பில் மஞ்சளாகத் தோன்றும், கிச்சிலி நிறத்தில் போதாகும் சிவந்த நிறத்தில் மலராகும். செக்கச் சிவந்த நிறத்தில் அலராகும். மற்றொரு குறிப்பு இம்மலருக்குண்டு. இதன் புறவிதழால் புல்லியே இதன் அகவிதழும் ஆகும், தனியே அகவிதழ் இல்லை சிவந்த புறவிதழ்களின் இடையே மகர நரம்புகள் செண்டாகத் தோன்றும், முறுக்குண்டு பிணிந்துள்ள புறவிதழ் பிணிநெகிழ் பிண்டி' என்றதன்படி நெகிழ்ந்து மலராகும். "பல்பூம் பிண்டி',8 "பிண்டி இணர் 4 என்பவையும் இது கொத்தாக மலர்வதைக் குறிக்கின்றன. இக்கொத்து தொங்கி அசைந்தாடும் இவ்வாறு தொங்கி அசைவதை நல்வழுதியார் என்பார், 'பொன்னைச் சுட்டு உருக்கியதன்மையில்,திறமையான வேலைப்பாட்டுடன் செய்யப்பட்ட குழை என்னும் மகளிர் காதணி தொங்கி அசைவதாகக் குறித்தார். இவ்வாறு காதணியாக மற்றொரு காதணி அமைப்பிற்கே கூறினார். இப்பூங்கொத்தை ஒருத்தி காதிற் செருகி அடிமேல் அடி ஒதுங்கிப் பூங்கொடி போன்று நடந்தாளாம். ஆம், செயலைப் பூ, காதிற் செருகி அணியாவது. இதனை, "சுடுநீர் வினைக்குழையின் ஞால (தொங்கச் சிவ, கடிமலர்ப் பிண்டிதன் காதிற் செதி இக -என்றார் நல்வழுதியார். - 'சின்கச் சின் ஒருகருது செரீஇ" என அகத்துறைத் தலைவனும், காதில் சூடினான். செயலைப் பூ மாலையாக அணியப் படுவதன்று. காதிற் செருகவே பயன்பட்டது. மலரைப் போன்று 1 பெரி. திரு : 2 : 9. 4 திணை. நூ : 63:1 2 பரி. திரட்டு 1 ; 8, பரி : 1.2 : 87, 88. 3 குறி.ப 88. .