பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626


"புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை நன்னாகம் நின்ற லரும்' -என்னும் முத்தொள்ளாயிரப் பாடல் புன்னாகம் நாகத்தினின்றும் வேறானது என்பதையும், நன்னாகம் என்னும் அடைமொழியால் இதன் புன்மைத் தொடர் பையும் காட்டுகின்றது. சேரனாம் மலைநாட்டு மன்னனது நாட்டுத் தலைநகர்ச் சிறப்பைப் புன்னாகச் சோலையுடன் சுட்டு வதால் இம்மரம் சோலையாகச் சிறந்ததை உணரலாம். இதனைப் போன்றே நாகப் படப்பை'2 என நாகமும் தோப்பாக நிறைந்து வளர்வது. - "வரையன புன்னாகம்' என்னும் பரிபாடல் கருத்தின்படி புன்னாகமும் நாகம் போன்று குறிஞ்சி நிலத்து மரம். இது நாகமர வகையில் புல்லியது எனினும் இதன் இனம் புன்னையாகக் கொள்ளப்பட்டது. நிகண்டுகள் புன்னாகத்தைப் புன்னையென்று காட்டுகின்றன. இருப்பினும் இதன் வேறுபாட்டை உணர்ந்த நச்சினார்க்கினியர் குறிஞ்சிப் பாட்டில் புன்னையினும் வேறாகக் குறிக்கப்படும் நறும் புன்னாகம்’ என்பதற்குப் "புன்னை விசேடம்' என்று பொருள் கண்டார். எனவே, இது புன்னை இனத்தில் ஒரு தனித்தகுதி கொண்டது. பிற இலக்கியங் களும் புன்னாகத்தையும் புன்னையையும் இணைத்துப் பேசுவது போன்று தனித்தனியாக வெவ்வேறு மரங்களாகவும் காட்டு கின்றன. ஆனால், குறிஞ்சிப் பாட்டின் பூப்பட்டியவில் இடம்பெற்றுப் "புன்னை விசேடம்' என்னும் ஒரு குறிப்பைப் பெற்றுள்ளதன்றி இதன் மலர் பற்றிய விவரம் ஏதும் தெரியக்கூடவில்லை. நறும் புன்னாகம் எனப்பட்டமை கொண்டு நாகமலர் போன்று இஃதும் மனங்கமழும் பூவாகின்றது. இனத்தால் புன்னையாயினும் பெயர் அடைமொழி, மலையிடம், நறுமணம் முதலியவற்றால் நாகமலர் போன்றதாகவே இதன் பிற விவரங்களையும் கொள்ள நேர்கின்றது. ബ--ബr-r - 1 முத் சேரன், 3 ւյք : 14 : 16, 2 பெருங் : இலா 15 : 8, 4 குறி : பா : 91.