பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பூர்ணசந்திரோதயம்-2 மனம் எவ்வளவு அதிகமாகக் குதூகலமடையுமோ அப்படியே உன்அக்காளைப் பார்த்தகாலத்தில், நான் அளவற்ற மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்தேன். உன் அக்காள் உங்களுடைய அத்தையின் தேகஸ் திதியைப் பற்றித்தான் நிரம் பவும் கவலையாகவும் உருக்கமாகவும் விசாரித்தாள்; அப்போது அவள் கண்ணிர் கூட விட்டுவிட்டாள். அவள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நான் தக்க மறுமொழி கொடுத்து, அவளைத் திருப்தி செய்தபிறகு நான் திருவாரூரிலிருந்து இங்கே வந்த காரணம் என்ன என்பதை உடனே நான் எடுத்துச் சொன்னேன்; அவள் இல்லாமல் இந்தக் கலியாணத்தை நடத்த உனக்கும் எனக்கும் இஷ்டமில்லை ஆகையால், நேரில் வந்து எப்படியாவது கையோடு அவளை அழைத்துக் கொண்டு போவதற்காகவே முக்கியமாக நான் வந்தேன் என்று அவளிடம் சொல்லி, எப்படியாவது வரத்தான் வேண்டும் என்று நயந்து கேட்டுக்கொண்டேன். அவள் என் வார்த்தை களைக் கேட்டு நிரம் பவும் சஞ்சலமடைந்து, 'ஆகா! நான் என்ன செய்வேன்! என்னுடைய நிலைமை மகா தர்ம சங்கடமான நிலைமையாக இருக்கிறது. என்னுடைய சொந்தத் தங்கையின் கலியாணத்துக்கு நான் வராமல் இருக்க வேண்டி யிருக்கிறதே என்ற நினைவும், ஏகாங்கியாக இருக்கும் அறியாத குழந்தையான என் தங்கை இப்படிப்பட்ட பெரிய காரியமான இந்தக் கலியாணத்தைத் தானாக எப்படி நடத்துவாள் என்ற கவலையும் ஒரு பக்கத்தில் வதைக்கின்றன. இங்கே இருக்கும் நிலைமையோ பரம சங்கடமானதாக இருக்கின்றது. பரோபகாரத்தைக் கருதி நெடுங்காலமாக எங்களுடைய குடும்பத்தை சவரட்சித்து வருகின்றவர்களான இந்த சோமசுந்தரம் பிள்ளையும் அவர்களுடைய சம்சாரமும் தங்கமான மனிதர்கள். இவர்கள் என்னைக் கண்ட முதல் என்னிடம் வைத்துள்ள வாத்சல்யம் அளவில் அடங்காததாக இருக்கிறது. இவர்கள் விருத்தாப்பியர்கள். இவர்களுக்குக் குழந்தைகளாவது வேறே நெருங்கிய பந்துக்களாவது இல்லை.