பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பூர்ணசந்திரோதயம்-2 அம்மாள் ஏதோ வேறே காரியமாக அந்தக் கிழவனைப் பார்க்கப் போகிறவள் போல, சுமார் 12 மணிக்கு அவனுடைய மாளிகைக்குப் போய் பார்த்துவிட்டு வந்தாள். கிழவன் வழக்கம்போல உற்சாகமாகத்தான் இருக்கிறானாம். நேற்று ராத்திரி நடந்த சங்கதி எதையும் அவன் அம்மாவிடம் வெளியிடவே இல்லையாம். ஒன்றையும் அறியாதவள் போல அம்மாள் அவ்வளவோடு வந்துவிட்டாள். நேற்று ராத்திரி முழுதும் நாற்காலியிலிருந்து வேதனைப்பட்டி ருப்பான் என்று தான் எண்ண வேண்டியிருக்கிறது' என்றான். பூர்ணசந்திரோதயம், "ஆம்; அது எனக்குக் கூட விசனமாகத் தான் இருந்தது. இருந்தாலும் நான் வேறே என்ன செய்கிறது? அந்த இடத்திலிருந்து நான் தப்பித்துக் கொண்டு வர வேறே மார்க்கம் இல்லை. அவனை அப்படி மாட்டி வைத்துவிட்டு வர வேண்டியது கட்டாயமாகி விட்டது. இனிமேல் கிழவன் வேறே யாரையும் அந்தக் கொடிய நாற்காலியில் சிறை வைக்கத் துணியமாட்டான். அது என்னால் ஏற்பட்ட அநுகூலம். ஆனால், அவன் இப்படிச் செய்ததில் நமக்கும் ஒரு பெரிய அனுகூலம் ஏற்பட்டது. வெகு நேரம் வரையில் நான் அந்தக் கிழவனுடைய வீட்டில் இருந்துவிட்டு அகாலத்தில் இளவரசரிடத்திற்குப் போனதும் நன்மையாகவே முடிந்தது. அந்தக் காரணத்தினால், நான் வீட்டுக்குத் திரும்பிப் போக நேரமாகிவிட்டது என்று சொல்லி, இளவரசருடைய எண்ணத்தைப் பூர்த்தி செய்யாமல் வர அநுகூலமாக இருந்தது. இளவரசரால் நமக்கு ஆகவேண்டிய மிகுதிக் காரியத்தையும் பலிதமாக்கிக் கொண்டு, அதற்குமேல், அவருடைய இஷ்டப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சகலமான ஏற்பாடுகளையும் நம்முடைய இஷ்டப்படி முடித்துக்கொள்ளுமுன், அவருடைய ஆவல் தீர்ந்து போகுமானால், அதன்பிறகு, அவர் அவ்வளவு சுலபமாக வழிக்கு வரமாட்டார்; அதைக் கருதி நான் அவரை எப்படி