பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்55



கவிஞன் ஒருவன் முன்னால் இருந்தான் “இது அச்சுப் பிழை” என்றான்.

“விளங்கவில்லை” என்றான் அவன் நண்பன்.

“பிரமன் படைப்பில் நேர்ந்த அச்சுப் பிழை” என்றான்.

“அவசரப்பட்டுப் பிறந்து விட்டாள்” என்றான் மற்றொரு நண்பன்.

“காகிதப்பூ பார்க்கலாம்; முகர முடியாது” என்றான் அந்தக் கவிஞனின் நண்பன். அவர்கள் அவளைக் கண்டு சிரிக்க இவ்வாறு பேசினார்கள்; அவர்கள் வயிறு வெடிக்க அவள் மேடை மீது இருந்து பதில் சொன்னாள்.

“என்னைப் படைத்த போது எமன் வந்து கேட்டுக் கொண்டான். “முற்றிய வடிவில் வெளியே அனுப்பாதே கற்றவர்கள் கூடக் கருத்து அழிந்து உயிர் இழப்பர்; எனக்கு வேலையே இல்லாமல் போய்விடும்” என்று முறையிட்டான்”

“அதனால் பிரமன் கொம்பு மழுங்கிய யானையாக என்னை அனுப்பிவிட்டான். என்னால் யாருக்கும் எந்த வம்பும் இல்லை” என்றாள்.

இதைக் கேட்டு அவையே சிரிப்பில் ஆழ்ந்தது. “காந்தருவத்தையோடு வந்த தோழி வீணாபதி பேடிப் பெண்” என்று பேசி அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

அவளைத் தொடர்ந்து தவள மேனியை உடைய தத்தை மேடைக்கு வந்தாள்; இமை கொட்டாது அவளையே பார்த்து அவள் அழகில் ஆழ்ந்தனர்; “அவள் பாடவே வேண்டாம்; பாடினால் மேடையை விட்டு உள்ளே போய் விடுவாள்” என்று அஞ்சினர். ஒவ்வொரு வினாடியும் அவளைப் பார்ப்பதில் கழித்தனர்; பாவையே