பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பூர்ணசந்திரோதயம்-2 அருமை பெருமைகளையெல்லாம் கண்கூடாகக் கண்டு அவளது சம்மதியைப் பெற்ற நிலைமையில் அவளை இனி இழப்பதைவிட, அவர் தமது ராஜபதவியையே இழக்கவும் சம்மதிக்கக் கூடியவராக இருந்தார். சல்லாயப் பட்டு அணிந்த பார்சீஸ்திரீயைச்சித்திரவதை செய்து கத்தியால் அணு அணுவாக அழித்தால்தான், அவரிடம் இருக்க இணங்குவதாகப் பூர்ணசந்திரோதயம் சொல்லுவாளாகில், அந்த மகா கொடிய காரியத்தையும், அவர் உடனே நிறைவேற்றிவிட்டுப் பூர்ணசந்திரோதயத்தின் பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்ளக் கூடியவராக இருந்தார். ஆகவே, பார்சீ ஜாதி மடந்தையி னிடத்தில் அவர் வைத்திருந்த எண்ணமெல்லாம் அடியோடு மாறிவிட்டது. இந்த உலகத்திலுள்ள சகலமான பார்சீஜாதி வடிவழகியர்களை யெல்லாம் விட பூர்ணசந்திரோதயம் ஒருத்தியே அழகிலும், மற்ற எல்லாமேம்பாடுகளிலும் நிகரற்ற நக்ஷத்திரச் சுடர்போன்றவள் என்ற உறுதியும், தாம் மற்ற எதை இழந்தாலும் அவளை மாத்திரம் இழக்காமல் அடைந்தே தீர வேண்டும் என்ற தீர்மானமும் இளவரசரது மனதில் உண்டாயின. ஆகையால், தாம் தமக்கும் மருங்காபுரி ஜெமீந்தாருக்கும் ஏற்பட்டிருந்த ஒப்பந்தத்தை நிவர்த்தி செய்து காள்ளவேண்டுவதே முடிபென அவர் தீர்மானித்துக் கொண்டார். ஆனால், அந்த விஷயத்தைக் கிழவரிடம் எப்படி வளியிடுவது; அவரைத் தமது கருத்திற்கு இணங்கும் படி எப்படிச்செய்வது? இனி பூர்ணசந்திரோதயம் தம்மோடு இருக்கப் போகிறாளென்பதை, கிழவரிடத்தில் மறைத்து .ெ ெ ఓ வைப்பதும் அநுசிதமான காரியம். நெடுநாளாகத் தமது அந்தரங்க நண்பராக இருந்து தமது ரகசியங்களை யெல்லாம் அறிந்திருப்பவரான அந்தக் கிழவரது மன வருத்தத்தை உண்டாக்கிக் கொள்வதும் நல்லதல்ல என்று பலவாறு எண்ணமிட்ட இளவரசர், தாம் உடனே மருங்காபுரி ஜெமீந்தாரது வீட்டிற்குப்போய் அவரைக் கண்டு நயமாகப்பேசி அவரது மனம் வருந்தாதபடி தங்களது ஒப்பந்தத்தை நிவர்த்தி