பக்கம்:மதன கல்யாணி-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மதன கல்யாணி படுக்க வைத்துத் தானும் அவளுக்குப் பக்கத்திலிருந்த ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டே இருந்தாள். தனது சரீரம் விண்ணில் இருந்ததோ மண்ணில் இருந்ததோ என்பது தெரியாமல் பதறிக் கொண்டிருந்தது. ஆனாலும், அளவு கடந்த களைப்பினால் உட்கார்ந்திருந்தாள். அவ்வாறு பொழுது கழிந்து கொண்டே போனது. அன்றைய ராத்திரி முழுதும் பக்கத்த ஹாலில் மனிதர் நடமாடிய ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. கோமளவல்லி என்னும் மெல்லியாள் அத்தனை மன வேதனை களையும் சகிக்க மாட்டாதவளாய் சாய்ந்தபடியே கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டாள். கல்யாணியம்மாள் மாத்திரம் விழித்த கண்களை மூடாமல் கடிகாரத்தைப் பார்த்த வண்ணமே உட்கார்ந்திருந்தாள். தான் மறுநாட் காலையில் என்ன செய்கிறதென்றும் பந்தோ பஸ்துக்கு வந்த இடத்தில் பெண்ணை இழந்துவிட்டுத் திரும்பிப் போய்த் தான் தங்களது மனிதர் முகத்தில் எப்படி விழிப்ப தென்றும், தானே திருமாங்கலியத்தை ஆசீர்வதித்துக் கொடுத்ததன் மேல் நடத்தப்பட்ட அந்தக் கலியாணத்தை இனி தான் எப்படி மறுப்பதென்றும் பலவாறு எண்ணமிட்டவளாய்க் கல்யாணியம் மாள் அன்றிரவு முழுதும் நரக வேதனை அடைந்தவளாக உட்கார்ந்திருந்தாள். தான் நல்ல பூஜை செய்து நல்ல பெண்ணைப் பெற்றிருந்தால், அவளது கலியாணம் எவ்வளவு சிறப்பாகவும் வைபோகமாகவும் நடந்திருக்கும் என்றும், தான் முன் ஜென்மத்தில் மகா கொடிய பாவமியற்றி இருந்ததால், தனது மூத்த குமாரியினது கலியாணம் அவ்வளவு கேவலமாகவும், திருட்டுத்தனமாகவும் நடந்ததோடு, தானும் அந்த இரவு முழுதும் அவ்வாறு நரக வேதனை அனுபவிக்க நேர்ந்ததென்றும், தனது புத்திரியின் கலியாணம் சாப்பாடுகூட இல்லாத விநோதக் கலியாணமாக முடிந்ததே என்றும் நினைத்து நினைத்துக் கரைகடந்த சஞ்சலத்தில் ஆழ்ந்து கிடந்தாள். கடைசியில், அந்த மகா பயங்கரமான இரவு கழிந்து போகப் பொழுதும் புலர்ந்தது. சூரிய வெளிச்சம் அந்த ஹாலுக்குள் நன்றாகத் தெரிந்தது. கோமளவல்லியம்மாளும் விழித்துக் கொண்டாள். கல்யாணியம்மாள், தனது ஆசனத்தை விட்டு எழுந்து வாசற் கதவண்டை போய் இன்னொரு முறை கதவைத் தட்டி கோபாலா கோபாலா என்று அழைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/52&oldid=853451" இலிருந்து மீள்விக்கப்பட்டது