பக்கம்:மதன கல்யாணி-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மதன கல்யாணி யான பிரபுக்களுடைய சிநேகம் சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய தல்ல. தங்களைக் கண்ட இந்த தினம் சுபதினம் என்றே நினைக் கிறேன். தாங்கள் அந்த பங்களவை எவ்வளவுக்கு வாங்கினிகள்? செட்டியார்:- அறுபது லட்சத்துக்குத் தான் வாங்கினேன்; அதிக மில்லை. ஆனால் ஒரு பெருத்த அரண்மனை போல இருக்கும் அந்த பங்களவை நான் வாங்கிவிட்டேனே யொழிய, எனக்கும் என்னுடைய கூட்டாளியைப் போல, பெண்டு பிள்ளைகள் எவரும் இல்லை. அப்படி இருந்தாலும், நல்ல முதல்தரமான இடமாவது ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒரு பைத்தியம் மாத்திரம் எனக்குண்டு. அதனால் நான் அதை வாங்கினேன். வக்கீல்:- தாங்கள் செய்தது நல்ல காரியந்தான். அந்த இடம் சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதல்ல. இதுவரை 'யில் அதை வாங்க, எத்தனையோ ராஜாக்களும், ஜெமீந்தார்களும் பிரயத்தனப்பட்டுப் பார்த்துவிட்டார்கள். எவருக்கும் கிடைக்க வில்லை. பத்திரமெல்லாம் முடிந்து போய்விட்டதா? செட்டியார்?. அதெல்லாம் நேற்றைய தினமே முடிந்து ரிஜிஸ்டரும் ஆகிவிட்டது. 60 லட்சம் ரூபாயையும் நேற்றைய தினந்தான் செலுத்தினேன். பங்களாவின் திறவுகோல் இதோ இருக்கிறது பார்த்தீர்களா? இன்றைய காலையிலேயே அதை ஒப்புக்கொண்டு புண்ணியாகவாசனமும் நடத்திவிட்டேன்; இப்போது நேராக அங்கே தான் குடி இருக்கப் போகிறேன். வக்கீல்:- சரி; நிரம்ப சந்தோஷம். ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் பெண்களும் பிள்ளைகளும் ஏராளமாக இருந்தால், அது நிரம்பவும் ஆனந்தமாக இருக்கும். அது ஒன்று தான் தங்கள் விஷயத்தில் குறை; தாங்கள் தனியாகப் போகிறீர்கள்; தங்களுக்கு வேண்டிய ஆள்மாகாணங்களுக்கெல்லாம் ஏற்பாடு செய்திருக் கிறீர்களா? செட்டியார்:- ஒ! செய்திருக்கிறேன். எல்லாரும் இன்னம் ஒரு நாழிகையில் வந்து சேர்ந்துவிடுவார்கள். வக்கீல்:- அப்படியானால் பரவாயில்லை. தாங்கள் இந்த நாலைந்து நாட்களாக எங்கே ஜாகை வைத்துக் கொண்டிருந்தீர் களோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/10&oldid=853227" இலிருந்து மீள்விக்கப்பட்டது