பக்கம்:வாழ்க்கை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

115


கொள்ளவில்லை. எனினும், நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும் என்று கருதியே அவன் பயப்படுகிறான்.

பூத உடல் அழிவதைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்த பின்னும், நம் உடல்களிலும் அந்த மாற்றம் ஏற்படுவதில் பயங்கரமான விஷயமோ, வெறுக்க வேண்டிய விஷயமோ என்ன இருக்கிறது ?

நான் மரிக்கத்தான் செய்வேன். இதில் பயங்கரம் என்ன இருக்கிறது? உடலின் வாழ்வில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளை யெல்லாம் கண்டு நான் அஞ்சவில்லை. இன்னும் ஏற்படாத இந்த ஒரு மாறுதலை மட்டும் எண்ணி, நான் ஏன் அஞ்ச வேண்டும்? இந்த மாறுதல் சரியானது என்றே என் அறிவும் அனுபவமும் ஒப்புக் கொள்கின்றன. இதில் எனக்குப் புரியாத விஷயம் ஒன்றுமில்லை ; பல தடவை நான் இதைக் கண்டு இது இயற்கை என்று என் வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். மிருகங்களும், மனிதர்களும் மரித்தல் அவசியம் என்றும், பல சமயங்களில் வாழ்க்கையில் அதுவும் ஒரு நன்மை என்றும் கருதி வந்திருக்கிறேன். பிறகு அதில் என்னதான் பயங்கரம் இருக்கிறது ?

வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சிக்குப் பொருத்தமான இரண்டு அபிப்பிராயங்களே இருக்க முடியும். ஒன்று தவறானது; இதன்படி பிறப்பிலிருந்து மரணம் வரை என் உடலில் ஏற்படும் அவஸ்தைகளே வாழ்க்கை. மற்றது உண்மையானது ; அதன்படி வாழ்க்கை என்பது நான் என்னுள்ளே அதைப் பற்றிக் கொண்டுள்ள உணர்ச்சியே. இவ்விரண்டில் ஒன்று தவறானது; மற்றது உண்மையானது. ஆனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/122&oldid=1122344" இலிருந்து மீள்விக்கப்பட்டது