பக்கம்:மதன கல்யாணி-3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 39 உட்புறத்தில் செலுத்தினாள். உட்புறம் மிகவும் விசாலமான கூடமாக இருந்தது. அவ்விடத்தில் இரண்டு சாய்மான நாற்காலி களும், இரண்டு பெருத்த சோபாக்களும், நாலைந்து கருங்காலி மேஜைகளும், சுவரோரமாகக் கிடந்த பீரோக்களும், மின்சார விளக்குகளும், மின்சார விசிறிகளும் காணப்பட்டன. அவர்கள் சம்சயிக்கவோ, லஜ்ஜைப்படவோ கூடிய வஸ்துக்கள் எதுவும் அந்தக் கூடத்தில் காணப்படவில்லை ஆகையால், அவர்களது மனதிற்கு அந்த இடம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. ஆகவே, கல்யாணியம்மாளும் அவளது செல்வச் சிறுமியர் இருவரும் உடனே அந்த ஹாலிற்குள் சென்றனர். அவ்வாறு அவர்கள் உட்புறத்தில் நுழைந்தவுடனே இன்ஸ்பெக்டர், சுவரிலிருந்த ஒரு விசையை அழுத்தி மின்சார விசிறிகளில் இரண்டைச் சுழற்றி விடவே, அந்த இடத்தில் ஜிலுஜிலென்ற சுகமான காற்று வீசியது. அப்போதும் அந்த ஹாலிற்குள் நுழையாமல் வெளித் தாழ்வாரத் திலேயே மரியாதையாக நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கல்யாணியம்மாளை நோக்கி, "அம்மணி இது கச்சேரியாகையால், . உங்களுக்குப் படுக்கை தான் சரியானதாக இருக்காது. அதற்குப் பதிலாக சோபாக்கள் இருக்கின்றன. எப்படியாவது இந்த ராப் பொழுதைக் கடத்துங்கள். பின் பக்கத்துக் கதவும், ஜன்னல்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கின்றன. அவைகள் அப்படியே இருக்கட்டும். இந்தக் கதவையும் முடி உட்புறத்தில் தாளிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறிய போது, இரண்டு ஜெவான்கள் ஒரு தாம்பாளத்தில் கனிவர்க்கங்கள், பால், இளநீர், தாம்பூலம் முதலிய வஸ்துக்களைச் சுமந்து வந்து உட்புறத்தில் ஒரு மூலையில் வைத்துவிட்டு வெளியே வந்தனர். உடனே இன்ஸ்பெக்டர் கல்யாணியம்மாளை நோக்கி, "அம்மணி நீங்கள் எல்லோரும் இன்னம் போஜனம் செய்யவில்லை போலிருக்கிறது; இதோ கொஞ்சம் பழம் பாலெல்லாம் இருக்கின்றன. உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். கதவை மூடிக்கொண்டு ஜாக்கிரதையாக இருங்கள். ஜெவான்கள் பத்துபேர் இந்த ஹாலைச் சுற்றிலும் இன்று ராத்திரி முழுதும் நிற்பார்கள். நான் மறுபடியும் உங்களுடைய பங்களாவுக் குப் போய், அவ்விடத்து சங்கதி எப்படி இருக்கிறதென்று பார்த்து விட்டு மறுபடியும் ஒரு நாழிகை நேரத்தில் வருகிறேன். நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/43&oldid=853441" இலிருந்து மீள்விக்கப்பட்டது