பக்கம்:வாழ்க்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

31


நாளுக்கு நாள் அதிக மக்கள் விழிப்படைந்து வருகின்றனர். மானிட வாழ்வின் அடிப்படையான முரண்பாடு பயங்கரமான தெளிவுடனும், வேகத்துடனும் பெரும்பாலான மக்களுக்கு விளக்கமாகி வருகிறது.

விழிப்படைந்த மனிதன் தனக்குத் தானே இவ்வாறு சொல்லிக் கொள்கிறான் : ‘என் வாழ்க்கை முழுதும் எனது சொந்த நலனையே தேடிக்கொண்டிருக்கிறது. அத்தகைய நலன் இருக்க முடியாது என்றும், நான் ஏதேது செய்தாலும், என்னென்ன வெற்றிகள் பெற்றாலும், எல்லாம் முடிவில் துன்பம், மரணம், அழிவிலே போய்த்தான் சேரவேண்டும் என்றும் என் பகுத்தறிவு கூறுகின்றது. நான் விரும்புவதற்கு நேர் மாறாக, என்னிலும், என்னைச் சுற்றிலும், தீமையும், மரணமும், மடமையுமே அடர்ந்திருக்கின்றன. நான் என்ன செய்ய வேண்டும் ? நான் எப்படி வாழமுடியும் ?’ இந்த வினாக்களுக்குப் பதில் எதுவும் தென்படுவதில்லை.

அவன் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறான். மறுமொழி கிடைப்பதில்லை. ஆனால், அவன் கேளாத கேள்விகளும் விடைகள் வந்து குவிகின்றன. விவரம் தெரியாத ஜனக் கும்பல்களில் ஒருவரைப் பார்த்து ஒருவர் ஏதேதோ செய்துகொண்டிருக்கும் சந்தடியே பலமாயிருக்கிறது.

அவனுடைய பரிதாப நிலையை எவரும் உணர்வதில்லை. ‘எல்லோரும் அறிவற்றுப் போனார்களா? அல்லது நான் தான் அறிவை இழந்துவிட்டேனா ?’ என்று அவன் சிந்திக்கிறான். பகுத்தறிவோடு கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/38&oldid=1122054" இலிருந்து மீள்விக்கப்பட்டது