பக்கம்:வாழ்க்கை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வாழ்க்கை


தன் மிருக இயல்பை அடக்கிப் பூரணமான பகுத்தறிவு உணர்ச்சியைப் பெறாத மனிதன், அடைய முடியாத இந்த நன்மையை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறான். அவனுடைய ஒரே இலட்சியம் எல்லா மனிதர்களும், எல்லாப் பிராணிகளும், தான் ஒருவனுடைய இன்பத்திற்காகவும் நன்மைக்காகவும் வாழவேண்டும் என்பது: அவன் துன்பத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் எப்படியாவது தப்பித்துக்கொள்ள வேண்டும். அவன் தன் தனி நன்மையை அடைய முடியாது என்பதையும், சுற்றியுள்ள மனிதர்கள் அவன் நலத்தை நாடாமல், தங்கள் தங்கள் நலத்தையே நாடிச் செல்வார்கள் என்பதையும் அவன் அநுபவத்தில் தெரிந்துகொண்ட பின்பும், அவன் தன் நம்பிக்கையைக் கைவிடுவதில்லை. ‘எல்லாரும் என்னை மட்டும் நேசித்தால்தான் எனக்கு இன்பம் கிடைக்கும். ஆனால், ஒவ்வொருவனும் தன்னை மட்டுமே நேசித்துக் கொள்கிறான். நான் என்ன செய்தும் பயனில்லை. நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை’ என்று மனிதன் தனக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறான்.

எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்து செல்கின்றன. வெகு தொலைவிலுள்ள நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் பற்றி ஆராய்ச்சி செய்து எத்தனையோ விஷயங்களை மனிதர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் தங்கள் வாழ்க்கையில் ஏன் இன்பமடைய முடியவில்லை என்பதை அவர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை! பெரும்பாலான மனிதர்களுக்கு இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/87&oldid=1123827" இலிருந்து மீள்விக்கப்பட்டது