பக்கம்:வாழ்க்கை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

111


வரும். இதனால் மனிதன் தான் அடைய வேண்டிய ஒரே நன்மையான அன்பை அடைய முடியாமற் போகிறது. மிருக வாழ்க்கையின் நலன் என்பது ஒரு பூஜ்யம். அதை எத்தனை எண்களால் பெருக்கினாலும் முடிவு பூஜ்யமாகவே இருக்கும். இக்காலத்து மக்கள் தாங்கள் பெற்றுள்ள போதனைகளால் இந்த உண்மையை உணர முடியாமல் இருக்கிறார்கள்.

மனிதனுக்குப் புறம்பாகவுள்ள நிலைமைகளால் இன்பம் ஏற்படாது. ஒவ்வொரு மனிதனுடைய மிருக இயல்பும் ஒரே மாதிரியான துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. ஸ்தூல வாழ்க்கையில் உடல் வாழ்க்கையில் - ஒருவரைவிட ஒருவர் அதிக இன்பம் பெறுதல் இயலாத காரியம். ஓர் ஏரியில் தண்ணீர் எந்த இடத்திலும் ஒரே மட்டத்தில் நிலையாக நிற்கும்; ஓரிடத்தில் உயர்ந்தும் மற்றோரிடத்தில் தாழ்ந்தும் இருப்பதில்லை. இதைப் போன்ற ஒரு சட்டமே மக்கள் வாழ்க்கையை ஆட்சி செய்கிறது. தண்ணீர் மட்டத்தை உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும்படி செய்ய முடியாதது போல், மனிதர் ஒருவரைப் பார்க்கிலும் ஒருவர் அதிகமாக இன்பமடையவும் முடியாது.

உலகத்தில் ஓர் ஏழைத் தொழிலாளி, அல்லது ஒரு நோயாளி துன்பத்தால் அழிவுறுவதைப் பார்த்து, மனிதர் தாங்கள் செல்வத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருந்தால் இன்பமாக வாழலாம் என்று எண்ணுகின்றனர். வமிச பரம்பரையாக இத்தகைய எண்ணம் ஏற்பட்டு வருகிறது. ஆயினும், மக்களுடைய இதயங்களில் பகுத்தறிவின் குரலையும், அன்பின் ஒளியையும், அறவே ஒழித்துவிட முடிவதில்லை. அறிவோடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/118&oldid=1122201" இலிருந்து மீள்விக்கப்பட்டது