பக்கம்:வாழ்க்கை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வாழ்க்கை


வாழ்க்கையின் முரண்பாடுகள் அனைத்தையும் தீர்த்துவைக்கக்கூடிய ஆற்றல் அன்புக்கு உண்டு என்பதையும், அதுவே வாழ்க்கையின் இலட்சியத்தை அளிக்கக் கூடியது என்பதையும் ஒவ்வொரு மனிதனும் அறிவான். ஆனால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள், அன்பு இடையிடையே ஏற்படும் உணர்ச்சி என்றும், சிறிது காலத்திற்குப் பின் நீங்கிவிடுகிறது என்றும், பின்னால் மேலும் துன்பங்கள் பெருகிவிடுகின்றன என்றும் குறை கூறுவார்கள். இவர்களுக்கு அன்பு ஒன்றே வாழ்க்கையின் நியாயமான மலர்ச்சி என்று தெரிவதில்லை. மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுகிற எத்தனையோ ஆயிரம் விஷயங்களில் இதுவும் ஒன்று என்று இவர்கள் கருதுகிறார்கள்.

வாழ்க்கையை உணர்ந்தோரே அன்பை அறிவர்

ஒவ்வொரு மனிதனும் தன் குழந்தை, தன் மனைவி, தன் நண்பர்கள், தன் தேசத்தார் ஆகியவர்களை மற்றவர்களின் குழந்தைகள், மனைவியர், நண்பர், தேசத்தார்களைப் பார்க்கிலும் அதிகமாக விரும்புகிறான். இந்த விருப்பத்தையே அன்பு என்று கருதுகிறான். அன்பு என்பதற்குப் பொதுவாக நன்மை செய்தல் என்று பொருள். நான் என் குழந்தையையும், மனைவியையும், தேசத்தையும் நேசிக்கிறேன் என்றால், மற்றக் குழந்தைகள், ஸ்திரீகள், தேசங்களைப் பார்க்கிலும் அவர்களின் நன்மையையே அதிகமாக விரும்புகிறேன். ஆயினும் அவர்களிடம் மட்டுமே எனக்கு அன்பு இருக்கிறது என்பதில்லை. பொதுவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/103&oldid=1122183" இலிருந்து மீள்விக்கப்பட்டது