பக்கம்:வெள்ளை யானை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சலிப்பு


ஒரு நீக்ரோப் பெண்ணின்
புருவத்தில்
கிரேக்கப் பேரழகி
ஹெலனைக் காணும்
காதல் பித்தர்கள்
குடும்பி யானதும்
தங்கள்
பார்வைக் கோளாறை
ஒத்துக் கொள்கின்றனர்.
காதல் ரோமியோக்கள்
கைப்பிடித்தபின்
ஒதெல்லோக்களாக
மாறிவிடுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/86&oldid=1311179" இலிருந்து மீள்விக்கப்பட்டது