பக்கம்:வாழ்க்கை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வாழ்க்கை


இரண்டும் ஆராய்ச்சிக்குப் பொருத்தமானவை. மனிதர் தமக்குப் பிடித்ததை வைத்துக்கொள்ளலாம். ஆனால், இரண்டிலும் மரண பயத்திற்கு இடமில்லை.

முதலாவது கருத்து, உலகம் தோன்றிய நாள் முதலே இருந்து வருவது. அதைச் சுருக்கமாக இவ்வாறு குறிப்பிடலாம்: ‘காலத்திலும் இடத்திலும் தோன்றும் சடப்பொருளில் அடங்கியுள்ள சக்திகள் செயற்படும்போது உயிர் தானாகத் தோன்றுகிறது. நமது பிரக்ஞை அல்லது உணர்ச்சி என்று நாம் கூறுவது வாழக்கையன்று. அந்த உணர்ச்சியில் வாழ்க்கை இருப்பதாகத் தோன்றுவதற்குக் காரணம் ஐம்புலன்களால் ஏற்படும் மயக்கமே. சில நிலைமைகள் ஏற்படும்போது அந்த உணர்ச்சி என்ற அனற்பொறி சடப்பொருளில் தென்படுகிறது. அந்தப் பொறி சுடர்விட்டு எரிந்து, பிறகு குறைந்து, முடிவில் முற்றிலும் அணைந்து விடுகிறது. உயிரும் பிரக்ஞையாகிய உணர்ச்சியும் சடத்திலிருந்து தோன்றியவையே. பின்னால் சடப்பொருள் மாறும்போது, இவைகளும் ஒன்றுமில்லாமல் அழிந்து விடுகின்றன. சடமே மறுபடி வேறு உருவத்தில் மிஞ்சுகிறது. குறிப்பிட்ட ஒரு நிலையில் சடப்பொருள் தானாக உயிர் பெற்று இயங்குவதால் உயிர் என்பது சடத்தின் ஒரு நிலையே யாகும்.’ இந்தக் கருத்து ஆராய்ச்சிக்கு முற்றிலும் பொருந்தியதுதான்.

வாழ்க்கையைப் பற்றிய மற்றக்கருத்து வருமாறு: உயிர் என்பது நான் என்னிடத்திலேயே கண்டு உணர்வதுதான். நான் எப்படியிருந்தேன் என்றோ, எப்படியிருப்பேன் என்றோ எண்ணாமல், இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/123&oldid=1122345" இலிருந்து மீள்விக்கப்பட்டது