பக்கம்:வாழ்க்கை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வாழ்க்கை


மடைய முடியும்’ என்று பகுத்தறிவு உணர்ச்சி கூறும்.

கொள்கை அளவில் இதை ஏற்றுக் கொண்டாலும், செயலில் இதைக் கடைப்பிடிக்க முடியாது என்று மனிதன் கருதுவான். ஆனால், அவன் பகுத்தறிவு உணர்ச்சி பின்கண்டவாறு அவனை இடித்துக் கூறும் : ‘நீ ஏதோ இன்பங்கள் என்று கருதுபவைகளை நீயாகத் தேடக்கூடாது. அவைகளை மற்றவர்கள் உனக்கு அளிக்க வேண்டும். இதற்கு மாறாக, நீயாக அவைகளைத் தேடிக்கொண்டால், இப்பொழுது ஏற்பட்டிருப்பதுபோல் தெவிட்டுதலும் துயரமும் ஏற்படும். மற்றவர்கள் உன்னை விடுவிக்கும் பொழுது தான் உனது கஷ்டம் நீங்கும்.

‘தனி மனிதனுடைய சுய நல ஆசையால் மற்றவர்களுடைய துவேஷம் ஏற்படுகிறது. எவ்வளவு அதிகமாய்ச் சுய நலத்தை நாடுகிறானோ, அவ்வளவு அதிகமாய்த் துன்பம் பெருகுகிறது. மரணத்திலிருந்து தப்பவேண்டு மென்று அவன் எவ்வளவு முயற்சிக்கிறானோ, அவ்வளவுக்கு அது அதிகப் பயங்கரமாகிறது.

‘மனிதன் வாழ்க்கையின் விதிப்படி நடக்காவிட்டால், அவன் எத்தனை முயற்சிகள் செய்தாலும் நன்மையடைய முடியாது. வாழ்க்கையின் விதி போட்டியும் பூசலும் அல்ல, எல்லா மக்களும் பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டும் என்பதே அவ்விதி.’

சுய நலத்தை விட்டுப் பிறர் நலத்திற்காக உழைக்கும்போது, அறிவுக்குப் பொருத்தமில்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/91&oldid=1123833" இலிருந்து மீள்விக்கப்பட்டது