பக்கம்:மதன கல்யாணி-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 8? என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்துக் காறித் துப்பப் போகிறார்கள். அவர்களோடு நீயும் சேர்ந்து கொண்டு சந்தோஷப் படு-என்று மிகவும் குரூரமாகவும் குத்தலாகவும் மொழிந்தாள். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பொன்னம்மாள், "ஆகா! அப்பிடியா சேதி நோட்டீசா குடுத்திருக்கறான்! அந்த மோளக்கார நாயிக்கு அம்பிட்டு கிருவம் வந்திடுச்சா இருக்கட்டும். அவனுக்காச்சு நமக்காச்சு ஒரு கை பார்த்துப்புலாம்; தொரெராசா சுட்டத்துலெ அவன் தப்பிப் பொளச்சிக்கினான்னு பாத்துக்கிட்டானா இப்படி அந்தக் கட்டெயன் கொறவனே உட்டு, ஒரே ராத்திரிலே அந்த மோளக்கார நாயெக் கோளிக்குஞ்செக் கசக்கறாப்பலெ கசக்கிச் சாறு காச்சிப்புடச் சொல்றேன். நீங்க பயப்படாதீங்க. அவன அந்தக் கச்சேரிக்குள்ளறவே நொளய முடியாமெச் செய்யத்துக்கு நானாச்சு. நீங்க ஏம்மா இப்பிடி வெசனப் பட்றீங்க? நாளெக் காத்தாலெயே நான் போயி அந்தக் கட்டெயன் கிட்ட ஏற்பாடு பண்ணிபுட்டு வாறேனுங்க. நீங்க சொம்மா இருங்க" என்றாள். கல்யாணியம்மாள்:- (மிகவும் பதைத்து விசனமுற்று) சிவ சிவா! நன்றாகச் சொன்னாய்! பொன்னம்மா போதும் நீ செய்கிற உபகார மெல்லாம். நாம் என்னென்ன அக்கிரமங்கள் செய்தோமோ இப்படிப்பட்ட எதிர்பாராத துன்பங்களுக்கெல்லாம் ஆளாகித் தவித்து நிற்கிறோமே! இன்னமுமா அக்கிரமத்தில் இறங்குகிறது வேண்டாமம்மா! உனக்கு ஆயிரங்கோடி நமஸ்காரம். நீ எதையும் செய்யாமல் சும்மா இருந்தால், அதுவே போதுமானது. ஐயோ பாவம்! அந்த மதனகோபாலனைக் கொல்ல யாருக்காவது மனம் வருமா? அடி பாவி முண்டை! நல்ல வார்த்தை சொன்னாயடி! அவனுக்குத் தீங்கு நினைத்து அதிலிருந்து நான் படுகிற பாடும், அடைகிற துன்பங்களும், துயரமும், அவமானங்களும் கொஞ்சமா நெஞ்சமா? ஒரு பாவமுமறியாத தங்கமான பையன் பேரில் நாம் அபாண்டமான பழியைச் சுமத்தினோமே; அவன் வயிறு பற்றி எரிந்ததனால் அல்லவா அந்தப் பாவமும் பழியும் நம்மை விடாமல் பலவகையாக வந்து பீடிகையும் கொண்டு ஆட்டுகின்றன. இதற்குத் தக்க பிராயசித்தம் செய்து அந்தப் பாவத்தை நாம் போக்கிக் கொள்வதை விட்டு அவனுக்கு இன்னமுமா கேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/85&oldid=853487" இலிருந்து மீள்விக்கப்பட்டது