பக்கம்:வீர காவியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

போர்ப் படலம்


இயல் 90 தனயனும் தந்தையும் தரியல ராகி முனைந்து பொருதனர் முதல்நாட் போரில் வாளெடுத்த நாள்முதலா வெற்றி யென்ற வரலாறே கற்றுயர்ந்த வேழன் இன்று, தாளெடுத்து வைக்கின்ற சிறும கற்கோ தளர்ந்தொதுங்கிப் பின்செல்வன்? எதிரில் வந்த கேளெடுத்து மொழிந்ததை ஓர் பொருட்டாக் கொள்ளான் கிளந்தவனை நகைத்தெள்ளி விரைந்து சென்ருன்; வேளெடுத்த கோளரியும் தன்னை நோக்கி விரைந்துவரும் வீரனைக்கண் டுவகை கொண்டான். 389 களிருென்று பிளிறுதல்போல் ஒருவன் ஆர்த்தான்; கடுஞ்சீயம் உறுமுதல்போல் சிறுவன் ஆர்த்தான்; ஒளிறுபெறும் வாளெடுத்துத் தனித்துச் செய்யும் ஒருசமரே தொடக்குதற்கு முனைந்து நின்று களிறனைய பெருமகனும் கடுங்கட் சீயம் கடுக்கவரும் ஒருமகனும் பொருத வந்தார்; நளிருடனே பொரவருவோர் தம்முட் கொண்ட நல்லுறவு யாதென்றே அறியார் அந்தோ! 390 கேள்-உறவினகிைய வீரன். வேள்-மன்மதன். ஒளிறு - விளங்குகின்ற . சியம்-சிங்கம். கடுக்க-ஒப்ப தளிர்-பகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/198&oldid=911366" இலிருந்து மீள்விக்கப்பட்டது