பக்கம்:வாழ்க்கை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

147


றால், அதற்குக் காரணம் அவர்கள் தங்களுடைய தனி வாழ்வே முழு வாழ்க்கையென்று கருதுவதுதான்.

பிறப்பதிலிருந்தே துயரமா யிருக்கிறது. வாழ் நாள் முழுவதும் துயரந்தான். மனிதன் தானாகத் துன்பமடைகிறான்; மற்றவர்களையும் துன்பப்படுத்துகிறான். துன்பமும் துயரமும் அவனுக்கு வழக்கமாகி விட்டன. ஆயினும், அவன் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறான்; அது ஏன் ஏற்படுகிறது என்று கேட்கிறான். நம் இன்பங்கள் எல்லாம் பிறர் துன்பங்களால் விளைந்தவை. மனிதனின் இன்பங்களுக்கு அவன் துன்பங்கள் எல்லாம் அவசியமானவை. துன்பமில்லாமல் இன்பமில்லை. துன்பமும் இன்பமும் ஒரே பொருளின் இரண்டு எல்லைகள். இவை ஒன்றுக் கொன்று அவசியமானவை. எனினும், மனி தன், ‘எதற்காக? ஏன்?’ என்று கேட்கிறான். துன்பமும் இன்பமும் ஒன்றாகச் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருப்பது தெரிந்திருந்தும், இக் கேள்விகள் கேட்கப்படுகின்றன; ஆனால், ‘ஏன் இந்த இன்பம், என்ன காரணத்திற்காக?’ என்ற கேள்விகள் மட்டும் எழுவதில்லை.

மிருகத்தின் வாழ்வு முழுவதும், சங்கிலித்தொடர் போல், பல துன்பங்களின் சேர்க்கையாகவே யிருக்கிறது; மனிதனுடைய மிருக இயல்பு முழுதும் அப்படியே யிருக்கிறது. மிருகமும் மனிதனும் பூரணமாகச் செயற்படுவதற்கு-தொழில் செய்வதற்கு- இந்தத் துன்பமே தூண்டுகோலாயுள்ளது. துன்பம் ஒரு வேதனை உணர்ச்சி; அது செயல் புரியத் தூண்டுகிறது; செயல், வேதனை உணர்ச்சியை விரட்டிவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/154&oldid=1122378" இலிருந்து மீள்விக்கப்பட்டது