பக்கம்:வாழ்க்கை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

105


பிறருக்கு நன்மை செய்வதற்காகத் தன்னைத் தியாகம் செய்வதற்கு முன்னால், அவன் வெறுப்பைக் கைவிட வேண்டும். அதாவது தீமை செய்வதை விட வேண்டும்; சிலரை மட்டும் குறிப்பிட்டு அன்பு செலுத்துவதையும் விட்டொழிக்க வேண்டும்.

அத்தகைய மனிதனின் நலன் அன்பினாலேயே ஏற்படும். செடியின் நலன் சூரியனின் ஒளியில் இருப்பதுபோல், அவன் நலன் அன்பில் இருக்காது. திறந்த இடத்திலுள்ள செடிதான் எந்தப் பக்கங்களில் வியாபித்து வளர வேண்டும் பாபிய. என்றோ ஒளி நல்லதா, வேறு நல்ல ஒளி கிடைக்கிறவரை காத்திருக்கலாமா என்றோ கேட்டுக்கொண்டிருப்பதில்லை. உலகெங்கும் பரவிக் கலந்துள்ள ஒளியை அது பெற்றுக்கொண்டு அதையே நோக்கி வளர்கிறது. இது போலவே சுய நலத் தியாகம் செய்தவன், மற்றவர்களிடமிருந்து தான் பெற்று வந்தவைகளில் எவற்றைத் திரும்ப அளிக்க வேண்டும் என்றோ எவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றே ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. ஆனால், தன்னை முழுவதும் அர்ப்பணம் செய்து, தன் கண்முன்பு தோன்றும் அன்புக்காக வாழ்க்கையைச் செலவழிக்கிறான். இதுத்தகைய அன்புதான் மனிதனுடைய அறிவின் இயல்புக்கு பூரணத் திருப்தி யளிக்கும்.

அன்பே உண்மையான
வாழ்க்கையின் செயல்முறை

ஒரு நண்பனுக்காக ஒருவன் தன் வாழ்க்கையை அளிப்பதே அன்பு. தன்னைத் தியாகம் செய்தலே உண்மையான அன்பு. ஒருவன் மற்றொருவனுக்காகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/112&oldid=1122192" இலிருந்து மீள்விக்கப்பட்டது