பக்கம்:வாழ்க்கை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

39


லட்சணங்களை அறியாத ஒரு பேதை, தன் உடலின் மாறுதல்களைக் கண்டு பயந்து, துயர்ப்படுவதைப் போன்றது. பின்னால் குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு, தாய்மையின் கடமைகளைச் செய்யவும், அதன் இன்பங்களை நுகரவும் தகுதி பெற்று வளர்வதை அந்த யுவதி அறியாமல், இயற்கைக்கு மாறான தோற்றங்கள் தன் உடலில் ஏற்பட்டிருப்பதாகவும், தன் ஆரோக்கியம் கெடுவதாகவும் வீணாக வேதனைப் படக்கூடும். இத்தகைய வேதனையையே புது வாழ்வு பெற்ற மனிதர்களும் அநுபவிக்கிறார்கள்.

ஒரு மிருகம், தன் இயல்பை உணராமல், தான் வெறும் சடப்பொருள் என்று கருதி, ஒரே இடத்தில் படுத்துக் கிடப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால், உடலுக்கு உணவு வேண்டிப் பசி எழுந்துவிடும் ; இனப்பெருக்கத்திற்கு வேண்டிய ஆசையும் எழும். இவ்விரண்டும் அதை நெடு நேரம் அசைவற்றுக் கிடக்கும்படி விடுவதில்லை. மிருகம், உயிரற்ற பொருளாக இருக்க முடியாமல், விழிப்படைகிறது. சடமாய்க் கிடந்த வாழ்வு மாறி மிருக வாழ்வு ஆரம்பமாகும் போது, அது திகைப்படைந்து துயரப்படுகின்றது. மிருகம் தன்னைச் சடப்பொருள் என்று கருதியது போலவே, மனிதன் தனக்கென்று தனி வாழ்வு உண்டு என்று கருதி வந்திருக்கிறான்.

மிருகம் தன் துயரத்தை ஒழிக்க வேண்டுமானால், சடத்திற்கு உரிய விதிகளின்படி நடவாமல், பிராணிகளுக்கு உரிய விதிகளின்படி நடக்க வேண்டும். இது போலவே மனிதனும், மிருகங்களின் விதிகளின்படி நடக்காமல் தன் பகுத்தறிவு உணர்ச்சியின் மூலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/46&oldid=1122063" இலிருந்து மீள்விக்கப்பட்டது