பக்கம்:வாழ்க்கை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வாழ்க்கை


மிருக இயல்பு தன் விதியை மீறிச் செல்வதை எச்சரிக்க முடியாது: பகுத்தறிவு உணர்ச்சி துன்பத்தை அநுபவிக்கா விட்டால், மனிதன் உண்மையை உணர முடியாமல், தன் வாழ்க்கையின் நியதியை - சட்டத்தை - அறியாமலே இருந்து விடுவான்.

தனி மனிதர்களின் துன்பங்களையும். மானிட வர்க்கத்தின் தவறுகளின் காரணங்களையும், இவைகளைக் குறைப்பதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் உணர்வதே மனித வாழ்வின் கடமை. நான் என்னைப் போன்ற மற்றவர்களின் துயரங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்; என் பகுத்தறிவு உணர்ச்சியால், தனி மனிதர்கள் அடையும் துயரங்களிலிருந்து எல்லாவற்றிற்கும் பொதுவான காரணத்தைக் கண்டுபிடித்து, அதைத் துடைக்க வேண்டும்.

துயரப்படுவோருக்கு உதவியாகச் செல்லும்படி அன்பு நம்மைத் தூண்டுகின்றது; துயரத்தின் பொதுக் காரணங்களைக் கண்டு துடைக்கும்படி அது நம்மை ஏவுகின்றது. இதைச் செய்வதே மனிதன் தன் வாழ்க்கையில் நலனை அடையும் மார்க்கம்.

மனிதனின் வாழ்க்கை துக்க மயம். ஒரே ஒரு விஷயந்தான் மனிதனின் துயரத்திற்குக் காரணமாயுள்ளது. அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவனது நன்மை எந்த வாழ்க்கையில் இருக்கிறதோ, அதை வாழும்படி அவனை எது தூண்டுகிறதோ, அதுவே துயரத்திற்கும் காரணமானது.

உலகின் தவறுகளோடு நானும் கலந்துகொள்வதாலும், என் தவறுகளை நான் உணராததாலும், என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/163&oldid=1122392" இலிருந்து மீள்விக்கப்பட்டது