பக்கம்:வாழ்க்கை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

வாழ்க்கை


தவறுகளின் விளைவுகள் என்பதை அறிந்து, அவன் தன் அன்புக்குப் பாத்திரமானவர்களின் துன்பங்களைக் களைவதிலும் குறைப்பதிலும் ஈடுபடும் பொழுது அவனுடைய துன்பங்களில் பாதி ஒழிந்துவிடுகின்றன. குறைந்த அன்புள்ளவன் அதிகத் துன்பத்தை அனுபவிக்கிறான். ஆனால் முற்றிலும் காரண காரியப் பொருத்தத்துடன் அன்பின் காரணமாகவே சகல செயல்களையும் புரிபவனுக்கு எவ்விதத் துன்பமும் இருப்பதில்லை. மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கும், சந்ததியார்களுக்கும், தங்களோடு வாழும் மற்றவர்களுக்கும் காட்டிவரும் அன்பென்னும் சங்கிலித் தொடரை அறுக்க முயலும்போதுதான் துன்பத்தின் வேதனை ஏற்படுகிறது. அன்பே மானிட வாழ்க்கையை உலக வாழ்க்கையோடு பிணைத்து நிற்கிறது.

துன்பங்கள் வாழ்வுக்கு அவசியம்

‘என்ன இருந்தாலும் துன்பம், சரீரத் துன்பம் இருக்கிறதே! இந்தத் துன்பம் எதற்காக? ஏன்?’ என்று மனிதர் கேட்கின்றனர். இந்தத் துன்பம் மனித வாழ்வுக்கும் நலனுக்கும் அவசியம். துன்பமில்லாவிட்டால் வாழ முடியாது. இந்தத் துன்பத்திலிருந்து முதன்மையான நலன்கள் பெருகுகின்றன.

வேதனை நமது தனி மிருக இயல்பைப் பாதுகாக்கிறது. மிருகங்களும் குழந்தைகளும் அடையும் வேதனையை உடனேயே மறந்துவிடுகின்றன. ஆனால், அறிவு பெற்ற மனிதன் மறக்கவும் முடிவதில்லை; அதைக் கற்பனை செய்தும் பெருக்கிக் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/159&oldid=1123875" இலிருந்து மீள்விக்கப்பட்டது