பக்கம்:வாழ்க்கை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

153


கிறான். பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படையாத நிலையிலுள்ள மனிதனுக்கு வேதனை மிக அதிகமா யிராது. ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி தோன்றிய பிறகு மிருக இயல்பை அறிவுக்குப் பொருத்தமாக நடக்கும் படி கட்டுப்படுத்த இந்த வேதனையே உதவுகிறது. இந்த உணர்ச்சி வளர வளர, வேதனை குறைந்து கொண்டே வருகிறது.

பகுத்தறிவு உணர்ச்சியைப் பூரணமாய்ப் பெற்றிருக்கும் போதுதான் நாம் துன்பங்களைப் பற்றிப் பேச முடிகிறது. ஏனெனில், இந்த நிலையிலிருந்துதான் வாழ்க்கையே ஆரம்பமாகிறது. இதன் பின்புதான் துன்பங்கள் என்ற நிலைகள் ஆரம்பமாகின்றன. இந்த நிலையில் வேதனையைப் பற்றிய உணர்ச்சி மிக உச்ச நிலையை அடைய முடியும். அதே மிகக் குறைந்த நிலையையும் அடைய முடியும். இரண்டும் நம் உணர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. வேதனை ஓர் அளவில் தான் ஏற்படுகிறது. என்றாலும், அதைப்பற்றிய நம் உணர்ச்சியினால் வளர்ந்தோ குறைந்தோ தோன்றுகிறது. வேதனையை உடல் உணருவதற்கு ஓர் எல்லையுண்டு; அதற்குமேல் எல்லையைத் தாண்ட முடியாது. இது எல்லோருக்கும் தெரியும். அளவுக்கு மேல் வேதனை ஏற்பட்டால் நம் பிரக்ஞை நின்றுபோகிறது; மயக்கம் ஏற்பட்டுவிடுகிறது; அல்லது கடுமையான ஜுரம் ஏற்படுகிறது; அல்லது மரணம் சம்பவிக்கிறது. வேதனையின் எல்லை இவ்வளவுதான். ஆனால் இதைப்பற்றி நாம் எண்ணுவதில், வேதனை உணர்ச்சியை அளவில்லாது பெருக்கிக் கொள்ளவும் முடியும். மிக மிகக் குறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/160&oldid=1123876" இலிருந்து மீள்விக்கப்பட்டது