பக்கம்:வாழ்க்கை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

97


மற்ற மனிதர்களையும் நான் நேசிக்கிறேன். இது போல்தான் மற்ற மனிதர்களும் தங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களின் நன்மைகளையே நாடுகிறார்கள். ஆனால், ஒருவரின் நன்மையை நாடும்பொழுது, மற்றவர்களுடைய நன்மை குறைகிறது ; சில சமயங்களில் மற்றவர்களுக்குத் தின்மையாகவும் முடிகிறது.

ஆகவே, இதிலிருந்து வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அன்புக்காக ஒருவன் வேலை செய்ய வேண்டும்? எந்த முறையில் செய்ய வேண்டும்? எந்த அன்பிற்காக மற்ற அன்பைத் தியாகம் செய்ய வேண்டும்? மனைவி, குழந்தைகள், நண்பர், தேசம் - இவர்களில் யாரிடத்தில் மிக அதிகமாக அன்பு செலுத்த வேண்டும்? அருமையான தாய் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டுமானால், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் அன்பைக் கெடுத்துக் கொள்ளாமல் முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவன் தன் சொந்த நலத்தைக் குறைத்துக் கொண்டால் தான் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். அவன் சொந்த நலத்தை எவ்வளவு குறைத்துக் கொள்ள வேண்டும் ? பிறர் நலத்திற்காக எவ்வளவு உழைக்க வேண்டும்?

அன்புணர்ச்சியை விளக்கமாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்தக் கேள்விகள் மிகவும் சாதாரணமானவை என்று தோன்றும். ஆனால், இவை தீர்க்க முடியாத கடினமான கேள்விகள்.

இவைகளைப் போன்றகேள்வியைத் தான் கிறிஸ்து பெருமானிடம், ‘எனது அண்டை வீட்டுக்காரன் யார்?’ என்று ஒரு வழக்கறிஞர் கேட்டார்.

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/104&oldid=1122184" இலிருந்து மீள்விக்கப்பட்டது