பக்கம்:வாழ்க்கை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வாழ்க்கை


அருகேயுள்ள பொருள்களைவிட அவைகள் தெளிவாய்த் தெரிகின்றன என்றும் எண்ணுகிறான். ஆகாயத்தையும் அடிவானத்தையும் பார்க்கிலும் அருகிலுள்ள வீடுகளும் மரங்களும் அவனுக்குத் தெளிவு குறைந்து தோன்றுகின்றன. அவனுடைய உள்ளங்கையைக் கண் முன்பு ஆட்டிப் பார்த்தால், அது இன்னும் தெளிவில் குறைந்து தோன்றும். எங்கும் பரந்துள்ள ஒளியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை ; பார்ப்பதற்கே அது மிகவும் கஷ்டமான பொருளாகிவிடும்!

மனிதனுடைய போலி அறிவும் இப்படித்தேனே இருக்கிறது! சந்தேகமில்லாமல் அவனுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பகுத்தறிவு உணர்ச்சியை அறிய முடியாத ஒன்று என்று அவன் கருதுகிறான். அதே சமயத்தில், எதை அவன் எளிதில் புரிந்து கொள்ள முடியாதோ, அதை ஆராய்ந்து பார்த்துவிடலாம் என்று முனைந்துவிடுகிறான். சடப்பொருள்-பிரகிருதி-எல்லையற்றது ; என்றும் உள்ளது. அதைக்கூட அறிந்துவிடலாம் என்று அவன் துணிவடைகிறான். இந்த விஷயங்களிலும் தூரத்திலுள்ளது எளிதாகவும், அருகிலுள்ளது கடினமானதாகவும் தோன்றுகின்றன.

இந்தத் தோற்றம் தவறானது. உண்மை இதற்கு நேர்மாறானது. ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பும் நன்மை எது என்பதை நன்றாக அறிவான். மற்ற விஷயங்கள் எல்லாவற்றிற்கும் முன்னதாகவும், மற்றவைகளைப் பார்க்கிலும் நிச்சயமாகவும் அவன் தெரிந்துள்ளது இதுதான். இந்த நன்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/61&oldid=1122092" இலிருந்து மீள்விக்கப்பட்டது