பக்கம்:வாழ்க்கை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

81


விஷயம் 5000-வருடங்களுக்கு முன்னால் இருந்த நிலையிலேயே இன்றும் இருந்து வருகிறது.

மனித வாழ்வில் எப்படி இன்பமடைய முடியும் என்பது வெகு காலத்திற்கு முன்பே விளக்கப்பட்டிருக்கிறது. நாமே அதை உணராமல் உழன்று கொண்டிருக்கிறோம். அதை அறிந்ததும், அது நமக்குப் புதிதாய்த் தோன்றாமல், ஏதோ மறந்த விஷயம் நினைவிற்கு வந்ததுபோல் இருக்கும்.

கீழே கண்ட நிபந்தனையின் பேரில் தான் மனிதன் வாழ்வையும் இன்பத்தையும் பெறமுடியும் ; அவன் வாழ்க்கையை விஷமாக்கும் தீமைகளை அகற்ற முடியும் ; முரண்பாடுகள் துயரங்கள் முதலியவற்றையும், மரண பயத்தையும் ஒழிக்க முடியும் :

‘எல்லோரும் தங்களைவிட உன்னையே நேசித்து, உனக்காகவே வாழவேண்டும் என்று நீ விரும்புகிறாய். உன் விருப்பம் ஒரே நிபந்தனையின் பேரில் நிறைவேற முடியும் : எல்லா மனிதர்களும் மற்றவர்களின் நன்மைக்காக வாழ்ந்து, தங்களைப் பார்க்கிலும் மற்றவர்களை அதிகமாக நேசிக்க வேண்டும். அப்படியானால் தான் உன்னையும் மற்றவர்களையும் எல்லோரும் நேசிக்க முடியும். அவர்களில் நீயும் ஒருவனாக இருப்பதால் நீ விரும்பும் நன்மையை அடைய முடியும். எல்லா மனிதர்களும் தங்களைப் பார்க்கிலும் மற்றவர்களை நேசித்தால்தான் உனக்கு நன்மை ஏற்படும் என்றால், நீயும் உன்னைப் பார்க்கிலும் மற்றவர்களை மேலாக நேசிக்க வேண்டும்.’

தனி மனிதனின் இன்பம் ஏன் சாத்தியமில்லாமல் இருக்கிறது? முதலாவது காரணம்:

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/88&oldid=1122162" இலிருந்து மீள்விக்கப்பட்டது