பக்கம்:வாழ்க்கை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வாழ்க்கை


பயனே யில்லை. இந்த விதிகளின்படி மாறியே தீர வேண்டும் என்ற அவசியம் இருந்தால், இவைகளைத் தெரிந்துகொண்டாலும், தெரிந்துகொள்ளாவிட்டாலும் ஒன்றுதான். மண்ணுள் வாழும் எலிகளுக்கும், நீர் நாய் போன்ற மிருகங்களுக்கும் உரிய விதிகளே நம்மையும் ஆட்டிவைக்கின்றனவா !

பகுத்தறிவின் விதியை எங்கே கண்டுபிடிக்க முடியும் ? பகுத்தறிவை மனிதன் எங்கே கண்டுபிடித்தானோ அங்கேயே அதை அறிய முடியும். அதாவது, அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சியிலேயே அதை அறியலாம்; வேறு எங்கும் காண முடியாது. மனிதனை மிருகமாக எண்ணி எவ்வளவு தான் ஆரய்ந்து பார்த்தாலும், அந்த அறிவு ஏற்பட முடியாது.

‘சரித்திர ஆராய்ச்சி’ என்றும், ‘அரசியல் ஆராய்ச்சி’ என்றும் பல பெயர்களால் நடைபெறும் ஆராய்ச்சிகளின் மூலம் வாழ்க்கையைப் பற்றிக் கண்டுபிடித்துள்ள தத்துவங்கள் பயனற்றவை என்பதற்கு வேறு சான்று வேண்டியதில்லை.

மானிட அறிவின் இலட்சியம் ஒன்றுதான். அந்த முக்கியமான குறிக்கோளை மறந்துவிட்டு மற்ற விஷயங்களையே ஆராய்வதில் இன்னொரு பிரிவினர் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த விஞ்ஞானிகள், கூறுவதைக் கவனிப்போம்: ‘மனிதன் மற்ற விலங்கு களைப் போலவே உணவை உட்கொண்டு வளர்கிறான்; தன் வமிசத்தை விருத்தி செய்கிறான்; பின்னால் வயோதிகமடைந்து மரிக்கிறான். ஆனால், அவனுடைய மனது சம்பந்தமான நிகழ்ச்சிகளை மட்டும் புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/55&oldid=1122080" இலிருந்து மீள்விக்கப்பட்டது