பக்கம்:வாழ்க்கை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வாழ்க்கை


நடந்து வந்து, திடீரென்று அவைகளுக்கு உட்படாமல் சடத்தைப் போல் இருந்த இடத்திலேயே கிடந்தாலும், அல்லது மாண்டு போனாலும், அந்த இடத்தில் மிருகத்திற்கு உரிய விதிகளின் அமல் முற்றுப் பெற்றதாகக் கருத வேண்டும். அதன் உடல் வெறும் சடப் பொருளாகி, சடத்திற்குரிய விதிகளின்படியே நடந்து கொள்ளும்.

இதுபோலவேதான் நம் வாழ்க்கையும். நாம் பகுத்தறிவு உணர்ச்சியின் விதிக்கு உட்பட்டு நடக்கும் போதுதான் வாழ்க்கை உண்டு. அவ்வாறு அடங்கி நடக்காதபோது வாழ்க்கையும் இல்லை. அதாவது, வெறும் உடலின் மிருக விதிகளின்படியே நடத்தல் மனித வாழ்க்கை ஆகாது. சடத்தில் மிருக வாழ்வு இல்லாதது போலவும், மிருகத்தின் பகுத்தறிவு வாழ்வு இல்லாதது போலவும், பகுத்தறிவின் விதியைப் புறக்கணிக்கும் மனிதனிடம் மனித வாழ்க்கை இல்லாது போகிறது.

மரண அவஸ்தையிலுள்ள ஒரு மனிதனிடம் வாழ்க்கை இல்லை. அவன் கை கால்களை எவ்வளவு பலமாக அசைத்தாலும், அந்த நிலையை வாழ்க்கை என்று சொல்ல முடியாது. இதுபோலவே, பைத்தியத்திலும், மயக்கத்திலும், உணர்ச்சி - வெறியால் ஏற்படும் நடுக்கத்திலும் உள்ள ஒருவனுடைய நிலையை வாழ்க்கை என்று கருத முடியாது. அவனுக்கு உயிர் இருக்கிறது என்று மட்டுமே ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ஒருவன் எவ்வளவு மெலிந்திருந்த போதிலும், எவ்வளவு அசைவற்றுக் கிடந்த போதிலும், அவனுடைய மிருக இயல்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/71&oldid=1122114" இலிருந்து மீள்விக்கப்பட்டது