பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


திருமணம் கமழ்ந்து, வண்ணக் குடும்பம் அமைத்து, வண்டுக்கு விருந்தளித்து வளரும் இம் மலர்ப்பருவம் இல்லற நம்பி - நங்கை நிலை போன்றது. r இந்நங்கை இதழ்களால் பட்டுப் பாளம்: கமழ்வால் மணச் சுரபி: தேனால் சுவை ஊற்று: நிறத்தால் வண்ணக் கிண்ணம்; தாதுக்களால் சுண்ணச் சிமிழ், காட்சியால் எழிற்குமரி; அசைவால் கவர்ச்சிக் கூத்து: இசைவால் உணர்ச்சித் தென்றல் கவர்ச்சியால் சந்தனப் பேழை; மலர்ச்சியால் மங்கலச் சின்னம். மங்கலத்திலும் சொல்லே மங்கலம்: மணமொரு மங்கலம். கண்டால் மங்கலம், கேட்டால் மங்கலம்; காட்டினால் மங்கலம்; சூட்டினால் மங்கலம். எனவே, மலர்ப் பருவம் ஒரு மங்கலப் பருவம். "சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே 6. அலர்ப் படக் கம்பும் அலர்' 23 -இவ்வடி பருவம களில் எனது இனத்துத் தாமரை, கதிரவனை நோக்கி மலர்ந்து மலர் ஆயிற்று. கதிரவன்மறைவதால் கூப்பும்போது அலர் ஆகிவிட்டது. காலையில் மலர்; இஃதே மாலையில் அலர். (ஒளிதழ் மலர் தவிரப் பிற மலர்களின் புற இதழ்கள் உதிர அகவிதழ்கள் விரியும். விரிந்தவை கீழ்நோக்கி வளைந்து பரவும். விரிதலும் பரவலும் அலர்தல்' எனப்படும் இதனால் அலர்' எனப்பட்டேன். மலரின்விரிவே அலர். இதுகொண்டே நிகண்டுகள் இப்பருவத்தை "விரிமலர்' 24 என்று குறித்தன. விரிந்து மல 28 கலி ; 78 , 17 ... " 24. "இகமலர் வெதிர் தொடர்ப்பூ விரிமலரே .. பிங். நி: 2824 " .