பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


அல்லி என்பது அக இதழ். வண்ணமும் மென்மையும் கொண்ட எழில் மிக்க கவர்ச்சி உறுப்பு. இஃதே என்னைக் காட்சிப்படுத்துகிறது. 'பூவின் உள்வாய் அல்லிமேல் உறைவானும்”43 என்றும், "அல்லி அகவிதழ்”44என்றும் காணலாம். இரண்டையும் சேர்த்து “அல்லியே அகவிதழ்ப்பேர் அறைந்திடும் புறவிதழ்ப்பேர் புல்லியே”43 என்றும் பெயர்கள் குறிக்கப்படும். சூலகம் என்பது எனது இனப்பெருக்கத்திற்குக் கருக் கொள்ளும் பெண் உறுப்பு. இதனைத் தமிழ் நூல்கள் 'பொகுட்டு' என்று காட்டும். பொகுட்டு என்பதற்கு வித்து என்று பொருள். கருவை ஏற்று விதையை உண்டாக்குவதால் இப்பெயர் பெற்றது. கருக்கொள்ளும் பக்குவம் பெற்றது என்னும் பொருளில் 'கன்னிகை" என்றொரு பெயரும் இதற்குண்டு. 'பொகுட்டே கன்னிகை பூவினுள் கொட்டை” எனச்சேந்தன் திவாகரம் காட்டுகின்றது. மகரம் என்பது கருவை ஏற்றும் விந்துள்ள ஆண் உறுப்பு. மகரம் என்பதற்கு மங்கலான சிவப்பு என்றொரு பொருள் உண்டு. இவ்வுறுப்பு பெரும்பாலும் இந் நிறத்தது. ஆகையால் இப்பெயர் பெற்றது. தாது என்பது மகரத்தின் துணியில்-இறுதியில் ஒட்டி நிற்பது, இது கருக்கலப்பிற்கு உரிய துாள். இதனை மகரம் + அந்தம் = மகரந்தம் என வடமொழிக் கலப்போடு வழங்குவர் புதுமலர் கோங்கின் பொன்னெனத் தாது ஊழ்ப்ப”47 என்றபடி இது பொன்னிறமானது.ாள். இஃது என்னிடமிருந்து சிதறிப் பரவிப் பிற தாதுக்களுடன் சேர்ந்து கருக்கலப்பை உண்டாக்கும். இது மகரந்தத் துடன் ஒட்டி நிற்பதாயினும் தனிச் செயலுக்குரியதாகை யால் தனி உறுப்பாகும். எனினும் இதனையும் கூட்டியே கோசரம் மகரம் சிதரே கொங்கு, கேசரம் துணரினர் கிளர் மலர்த் தாதே’48 என நிகண்டுகள் பெயர்ப் பட்டியலிடுகின்றன. 43 ஞான. தே. 48 சேத், தி : மரப். 44 பிங், தி : 2841, 47. கலி: 33 : 1.2. 45 சூடா. நி: மரப்பெயர்: 51. 48 பிங். தி : 2809,