பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


இவ்வாறு தாம் கண்ட நிறம் கொண்டு காணாத கடவு ளர்க்கு நிறம் படைத்தனர். மலர்கள் பலவற்றையும் தொகுத்துக் கூறும் குறிஞ்சிப் பாட்டு தொகுத்துத்தொடுத்த மாலையை'வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇ' 110 என்று வண்ணங்கூட்டியே முடித்தது. பல வண்ணங்கள் அடுக்கிய காட்சி வானத்து வான வில்லின் வண்ண அடுக்குக்கு உவமையாகி, 'பொருகடல் வண்ணன் புனை மார்பில் தார்போல் திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ' என எனது வண்ணத்தால் காட்டப்படும். ஒரு பெண் பல வண்ண மலர்களால் மாலை தொடுத்தாள். அது விற்பதற்காகக் கட்டப்பட்டது. கட்டி முடித்து நிறைவேற்றுப் பார்வை இட்டாள். சில மலர்கள் குறைபாடாகநின்றன. அவற்றைத் களைந்து போட்டாள். அவையும் பல. சோழனது உறையூரில் காலைப்பொழுது, விற்பனைக்காகப் பலவண்ண மலர்களால் மாலை கட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான மாலைகள். கட்டி முடித்தபின் நிறைவேற்றுகின்றனர். பிசிராயுள்ள பூக்களையெல்லாம் கிள்ளிக் களைகின்றனர். களைந்து எறிந்த பூக்களும் பல வண்ணத் தவையாய்ப் பரந்து கிடக்கின்றன. இக்காட்சியை முத்தொள்ளா யிரம் எழுதும் ஆசிரியர் பார்க்கின்றார். சொல்மாலை கட்டுகின்றார்: "மாலை விலைபகர்வார் கிள்ளி எரிந்ததுச் சால மருவியதோர் தன்மைத்தால் - காலையே விற்பயில் வானகம் போலுமே, வெல்வேலான் பொற்பார் உறந்தை யகம் 12 வண்ணமலர்களின் சிதறல் வானவில்லாய்த் தோற்றியது. வானவில்லைப் பெற்றதால் உறையூர் மண்ணகம் விண்ணகம் ஆயிற்று. எனது நிறம் விண்ணையும் மண்ணுக்குக் கொணர்ந்தது. இதுமட்டுமா! மண்ணிலும் எத்துணையோ விந்தை செய்ய வல்லது எனது வண்ணம். 110 குறி. பா: 114 112 முத் :21. 111 கார். நா:1 -