பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


எனப்படுவேன் முல்லை நிலத்து ஒடையில் தோன்றி 'ஒடைப்பூ! எனப்படுவேன். மந்த நிலத்துக் குளத்தில் தோன்றிக் கயப்பூ: 'வயற்பூ எனப்படுவேன். நெய்தல் நிலத்தில் தோன்றிக் கழிப்பூ" என்றும் பேசப்படுவேன். கேணியில் தோன்றிக் கேணிப்பூ’ ஆவேன். எனது அல்லி பூத்த கேணி இருந்த இடம் இன்றும் சென்னையில் 'திருவல்லிக் கேணியாக உள்ளது. இங்குக் காட்டப்பட்ட பெயர்கள் யாவும் இலக்கிய ஆட்சிச்சொற்கள். கோட்டுக் குடும்பமும் நீர்க்குடும்பமும் நீங்கள் வைத்துப் பயிராக்குவன அல்ல. உங்களது உதவியும் பாதுகர்ப்பும் இன்றி உங்களுக்கு எளிதாகக் கிடைத்துப் பயன்படுவோம். அதனால் எமக்கொரு தனியிடம் தந்து எம்மைப் புகழ்ந்து பாடினர். 'பாடல்சால் சிறப்பிற் சினையவும் சுவையும்” 5 5 என்ற படி பாடல் பெறும் இனத்தவர் யாம். நீர்க்குடும்பத்தில் யாம் குவிந்து மலர்வதால் தேன் ஊறுவது குறையும். இதனால் வண்டுகள் நாள் ஆக ஆக எம்மை நாடுவதை விடுத்துச் சினைப்பூவில் படரும். இத்தகைய வண்டுகளை அன் பில்லாத மக்களுக்கு உவமையாக்கி, 'பயன் இன்மையின் பற்றுவிட்டு ஒருஉம் நயனில் மாக்கள் போல, வண்டினம் சுனைப்பூ நீத்துச் சினைப் படர' என்றார்.அந்தில் இளங்கீரனார். கூம்பி மலர்வது ஒரு குறையாகாது. ஆனால், நாலடியார் ஒர்ாடுத்துக்காட்டிற்காக ஒரு குறையாக்கிக் கொண்டார். நட்பு ஆராய்தலை விளக்கப் புகுந்து, 'கோட்டுப் பூப் போல மலர்ந்து பின் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பின்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல், ' -என்றார். எம்மைக் குறைவாக அவர் கொண்டாலும் யாம் அவரைக் குறைகூற வில்லை. நன்மைக்குப் பயன்படுவதே எம் வாழ்வாகையால் ஒரு நன்மைக்கு ஆட்படுத்தப்பட்டதை எண்ணி உவக்கின்றோம். மூன்றாவதாகிய கொடிக் குடும்பம் மணத்திற்கு எடுத்துக் காட்டானது. பாரியிடம் தேர்பெற்ற முல்லை வாழ்வியல் மலர் 155 கலி : 28 : 1. 157 நாலடியார் : 215 156 அகம் 71:2-4