பக்கம்:வாழ்க்கை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வாழ்க்கை


கிறார்கள். அதைத் தங்கள் வாழ்க்கையின் மூலம் மெய்ப்பிக்கிறார்கள். உயிர் வாழும் ஒவ்வொரு மனிதனும், உணர்ச்சி தெளிவாயுள்ள நேரத்தில், அதையே தன் அந்தராத்மாவில் உணர்கிறான். ஆனால், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள் மரணத்தை எண்ணிப் பயப்படாமல் இருக்க முடியாது. மரணத்தை அவர்கள் பார்க்கிறார்கள் ; அதை நம்புகிறார்கள்.

இந்த மனிதர்கள், ‘மரணம் இல்லையா! இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்! மரணம் நம் கண் முன்பு இருக்கிறது; கோடிக் கணக்கான மக்களை அது அரிந்து தள்ளிவிட்டது. நம்மையும் அப்படியே அரிந்து தள்ளிவிடும்! நீங்கள் என்ன சொன்ன போதிலும், அது இங்கே இருக்கிறது!’ என்று ஆத்திரத்தோடும் கோபத்தோடும் கூவுவார்கள். பைத்தியம் பிடித்தவன் கற்பனை உருவங் ளைக் கண்டு அஞ்சுவது போல், அவர்கள் மரணத்தைக் கண்டு நடுங்குகிறார்கள். பைத்தியக்காரன் தான் பயப்படும் உருவத்தைத் தொட்டுப் பார்த்ததில்லை. அதுவும் அவனைத் தீண்டியதில்லை. ஆயினும், அவன் மனக் கற்பனையால் திகில் ஏற்பட்டு அவனுக்கு வாழ்க்கையே இல்லாமற் செய்து விடுகிறது. மரணத்தைப் பற்றிய விஷயமும் இப்படித்தான். மனிதன் தன் மரணத்தைப் பற்றி அறியான்; அறியவும் முடியாது. அது அவனைத் தீண்டியதில்லை; அதன் நோக்கங்கள் என்ன என்பதும் அவனுக்குத் தெரியாது. பின் அவன் எதற்காகப் பயப்படுகிறான் ? தன்னை அது பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/121&oldid=1122204" இலிருந்து மீள்விக்கப்பட்டது