பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142


உறவுடைய மல்லிகை மல்லிகை என்னும் சொல்லில் தமிழின் சாயல் உள்ளதா யினும் சங்க இலக்கியங்களில் பரிபாடல் ஒன்றிலன்றி இச்சொல் இல்லை. பரிபாடலில், '" . . . . . ... . . . . ، ، ، ، ، ، ، ، நெய்தல் தொடுத்தாளே - மல்லிகா மாலை வளாய்' (11:14, 105) என்னும் நல்லந்துவனார் பாடலும், "மல்லிகை மெளவல் மணங்கமழ் சண்பகம்’ என்னும் நல்வழுதியார் பாடலும் இச் சொல்லை வழங்குகின்றன. நல்லந்துவனார் முல்லைக் கருத்தில் இச்சொல்லைப் பெய்திருப்பு தாகப் படுகின்றது. நல்வழுதியார் அந்நோக்கிலேயே அமைத் திருப்பார் போலும். இக்கருத்தைத் தெளிய இதன் தொடர்பான அடிகள் ஐந்தைக் காணவேண்டும். அவை, இவை : 'மல்லிகை மெளவல் மனங்கமழ் சண்பகம் அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி நல்லினர் நாக நறவம் சுரபுன்னை எல்லாம் கமழும் இருசார் கரைகலிழத் - தேறித் தெளிந்து செறியிருள் மருள்மாலை' -இம்மலர் கள் மாலைப் பொழுதுடன் கூறப்பட்டுள்ளன. இங்கு இன்றி யமையா முல்லை என்னும் சொல் இடம் பெறவில்லை. செய்யுளின் எதுகை அமைப்பை நோக்கினால் முல்லை இடம் பெறுவதற்கு நல்வாய்ப்பு உளது. இருந்தும் மல்லிகை இடம்பெற்று முல்லை இடம்பெறவில்லை. எனவே, ஆசிரியர் முல்லைக் கருத்திலேயே மல்லிகையை அமைத்திருப்பார் என்று கருதலாம். - மதுரைக் காஞ்சியின் ஈற்றில் உள்ள வெண்பாவில் மல்லிகை வருகின்றது. இப்பாடல் சங்க இலக்கிய காலத்திற்குப் பின்னர் இணைக்கப்பட்டது என்ற கருத்து உண்மையானதே. எனவே பிற்கால ஆட்சி எனலாம். . எழுந்த இலக்கியங்களில் சிலம்பில், 1 of ; 12, 17–82