பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145


முல்லைத் தொடர்பில் காணப்பட்ட குளவி, காட்டு மல்லிகை எனப்படும். அதனைக் காட்டு முல்லை என்பதே வழக்கு. சேடல், பவள மல்லிகை எனப்படும். அதிரல், மோசிமல்லிகை எனப்படும். பிச்சியைப் பிங்கலம் முல்லையாகக் கூறுகின்றது. வளர்த்த முல்லை வணைந்த எல்லை முல்லைக்கு ஒரு குடும்பம். அக்குடும்பத்திற்கு அதுதான் தலைமை. தன் குடும்பத்திற்கு மட்டுமன்று; தமிழர் குடும்பத்திலும் தனியிடம் பெற்றது. தனியிடம் என்றால் தமிழர்தம் வாழ்வியலுக்கு விதித்துக்கொண்ட ஒர் இலக்கண மலராக விளங்கியது. ஒரு பெண் பெதும்பைப் பருவம் கடந்து மங்கைப் பருவம் அடைவது அவள் தாய்மைக்குப் பக்குவம் பெறுவதாகும். இதனை இல்லறத்திற்கு ஒர் அடித்தளம் எனலாம். இந்த அடித்தளத்திலேயே முல்லை மலர் கால் ஊன்றியது. பெண் பதினோராண்டு பத்துத் திங்களில் இப்பருவம் அடைவாள் என்பது ஒரு கீழ் எல்லைக்காலம், அந்தநாளில் அவள் தன் வீட்டு முற்றத்தில் ஒரு முல்லைக் கொடியை நடுவாள். இது முல்லை நிலத்தவரது மரபு. இம்மரபு ஏனையவர்க்கும் காலப் போக்கில் தொடர்பாயிற்று. - "புகழ்கொடி தன்பேர் பொறித்ததோர் கன்னி முல்லை அகழ்கடல் தானை வேந்தே அணி எயிறு ஈந்தது' - என்னும் சீவக சிந்தாமணிப் பாடலும் பதுமை என்பாள் மங்கைப் பருவமடைந்து முல்லை நட்டதைக் குறிக்கின்றது. அம்முல்லை இரண்டு திங்களில் தழைத்து வளர்ந்து பல்லைக் காட்டி, முறுவல் செய்வதுபோன்று அரும்பும். அரும்பிய 1 சி.ை சி ; 1268 米10