பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159


- 'பல்லை உகுத்திடுவம் என்று சொல்லி அதன் பல்லாம் முல்லை மலர் மீது பாய்ந்து மிதித்துச் சிதறி விழச்செய்தது. பல்லுடைந்து வீழ்ந்தது. முல்லைக்கு வேண்டியதுதான் இலக்கிய அளவில். - கொடியிலும், கார் காலத்திலும் தென்றலிலும் கூடிச் சிரிப்பது மட்டுமன்று; முடியிலும் ஏறி ஏளனச் செயலைச் செய்யும், எதிர் வீடு ஒரு பார்ப்பன வீடு. அந்த வீட்டுத் தலைவன் பார்ப்பான் வெளியூர்ப் பணிகளைக் கொள்ளாதவன். விட்டோடு தான் இருப்பான். அதனால் அவன் மனைவி பார்ப்பனத்தி முல்லைப் பூவைத் தலையில் சூடிக்கொள்வாள். கணவனைப் பிரிந்திருப்பவள் சாளரத்தின் வழியே பார்க்கின்றாள். எதிரே சற்றுத் தொலைவில் தெரிகின்ற சாரல் பக்கத்தில் பூத்த முல்லை மலர்களைப் பார்ப்பனத்தி பறித்துச் சூடிக் கொள்கின்றாள். பக்கத்தே அந்தப் பார்ப்பனன் ஒட்டி நிற்கின்றான். இவள் தன் வீட்டைப் பார்க்கின்றாள். அவன் இல்லாமை தவிப்பை தூண்டியது. இவ்வாறெல்லாம் நடக்குமென்று பிரிந்துள்ள இடத்தில் அவனே நினைத்தும் ப்ார்க்கின்றான். தன் மதர்ப்பாகனிடம் சொல்லுகின்றான் : 'கான் முல்லைக் கயவாய் அலரி (அதிரல்) பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய' - மணத்தை மயக்கும் மாலைப் பொழுதில் அதனைப் பார்த்து "வகுத்துங் கொல்லோ திருந்திழை அரிவை'. அதனால் தேரை விரைந்து ஒட்டு’ என்று துடித் துக்கொண்டு வருகின்றான் வருகின்றவன் முல்லையை மறந்து வரமாட்டான். வழியில் மணக்கும் முல்லை இவனை விடுமா என்ன? எடுத்துத் தானும் சூடிக்கொள்வான். பாகனையும் ஏவலரையும் சூடிக்கொள்ளச் செய்வான். அவன் அவனுக்கும் அவள்-அவள் உள்ளார் அன்றோ! வீட்டு வாயிலில் வந்து தேரை நிறுத்துவான் என்பது தோழிக்குத் தெரியும். தலைவி வருந்துவாளே என்று வருந்தும் தோழிமாருக்கு அவள் சொல்கின்றாள் : - 'சிறுவி முல்லைப் பெரிது கமழ் அலரி தானும் சூடினன்; (சூடியவனாக) இளைஞரும் மலைத் துனர்? ஆகத் தேர் வாயிலில் வந்து நிற்கும்; பார்ப்பீர்' என்றாள், 1. கற் 831 : 8, 4. ? நம் : 861 : 1.2.