பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187


இவற்றின் மலர்ச்சியிலும் இவ்வேறுபாடு உண்டு. ஆம்பல் இதழ்கள் சுற்று வட்டமாக அகல விரிந்து மலரும். இதன் அரும்பு கொக்கினுடைய அலகு போன்றது. இந்த முகை மலர்வதையும் வைத்து நற்றிணை, இதன் முகை கொக்கின் அலகுபோன்று கூம்பியது என்னும், இதன் மலர்ச்சி விடிவெள்ளிபோன்று ஒளி தருவது என்றும் உவமை கூறி விளக்குகின்றது: "கொக்கின் கூம்பு மு கை அன்ன கணைக்கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது குணக்குத் தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும்'T - என்பது அது. இவ்வுவமையாலும் இன்றும் நாம் காணும் காட்சியாலும் ஆம்பல் அலர்ப் பருவம் கொள்ளும். ஏனைய மூன்றும் அகல விரிவன அல்ல. முனைக் கட்டு அவிழ்ந்து, வாய் நெகிழ்ந்து, இதழ்கள் சற்று இடைவெளியிட்டு நிற்கும் அளவே மலரும். இவ்வளவில் மலர்ப்பருவமே கொள்ளும்; அலர்ப்பருவம் ஏற்கா. இவ்வாறு மலரும் அளவாலும் இரண்டு வகையாகும். - மலரும் பொழுதாலும் ஆம்பலும் மற்றவையும் வேறுபாடு உடையவை. ஆம்பல் (குமுதப் பெயரில்) திங்களின் ஒளிக்கு மலரும் என்பர். 'மதிநோக்கி அலர் வித்த ஆம்பல் வான் மலர்’ 2 - என வெள்ளாம்பல் திங்களின் தோற்றத்தால் மலர்வது பாடப்பட்டது. இதனால் திங்களை "ஆம்பல் காதலன்' என்பர். கதிரவன் தோற்றத்தால் குவியும். இதனால் கதிரவன் ஆம்பல் பகைஞன் எனக் கம்பரால் பாடப்பட்டான். எனவே ஆம்பல் இரவு மலர் ஆகின்றது. திங்களை நோக்கி விரியும் என்பதால் திங்களின் தோற்றத்திற்கு ஏற்ப நேரம் மாறி மாறி மலரும். இரவு ஏழு மணி முதல் விரிந்து மறுநாள் பகல் 11 மணி வரையும் குவியர் திருக்கும் என இக்கால ஆய்வியலார் கூறுகின்றனர். இலக்கியங் கள் இரவு மலராகவே ஆம்பலைக் குறிக்கின்றன. ஆனால், குறுந்தொகைப் பாடல் 122 ஒன்று,

  • குண்டுநீர் ஆம்பலும்கூம்பின. இனியே

வந்தன்று வாழியோ மாலை” எனமாலையில் குவிந்த தாகக் குறிக்கின்றது. ஆனால், "குண்டு நீர் என்னும் அடைமொழி 1 நற் : 280 : 2, 4. 2. கலி ; 72 : 6,