பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195


'ஆண்டுதோறும் இட்டு ஆ க்க வேண் டா து தொண்டு இட்டதே யீடாக எவ்வாண்டிற்கும் தொடர்ந்து வரும். இச்சிறப்பானே இதற்குத் தொடர்ந்த குவளை என்று பெயராயிற்று” என்றார். ஒரு முறை நீர் நிலையில் இட்டதே எக்காலத்தும் அற்றுப் போகா மல் வளரும் சிறப்பு உடையது குவளை. அடுத்துக் கூறப்பட்ட ஆம்பலுக்கு 'அலர்ந்த'என்னும் அடைமொழிஅமைந்து அதுவிரிந்து அலரும் சிறப்பைக் காட்டிற்று. இந்த அலர்ச்சி குவளைக்கு இல்லை. ஆனால், தொடர்ச்சி ஆம்பலுக்கும் உண்டு. 'தொடர்ந்த குவளை' என்னும் தொடரைச் சிறந்த தொடராகக் கொண்டு நூலைத் தொகுத்தோர் அப்பாட்டிற்குத் தலைப்பாக்கினர். இவ்விரண்டு மலர்களும் வளமான சேறு கண்ட இடத்தில் பூக்கும். வயலில் பூத்தால் பயிர்த்தொழிலுக்கு அது களையாகும். அவற்றைப் பறிப்பர். களையெடுத் தலைக் களைகட்டல்' என்று திருக்குறளும் காட்டும். இஃதே கட்டல், கட்குதல்’ எனப்படும்' நெய்தலும் இவ்வாறு பறிக்கப்படும். 'சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்’ 'குவளை கட்டும்'2 -என்று களையாகப் பறிக்கப்படுதல் கூறப்பட்டது. களையாக அல்லாமல் சூடிக்கொள்வதற்காகப் பறிப்பதே மிகுதி. அதனைச் சிறுமியர், குமரியர் பறிப்பர். அவ்வாறு பறிப்பதற்குக் குற்றல், குறுதல்’ என்றும் கூறப்படும். அவ்வாறு பறிப்போர் நீண்ட நேரம் களைப்பு நேரும் அளவு பறிப்பர். களைப்பு நீர் வேட்கையை உண்டாக்குவது. ஆனால், வேட்கை எழுந்தாலும் நீரில் நிற்பதால் உடன் அக்குளநீரைப் பருகுவர். இவற்றையெல்லாம் உள்ளடக்கி, "ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு' -என்றும் 'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு'4 -என்றும் காட்டப் பட்டன. - 'அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து' என்றும் 'கழிய காவி குற்றும் கடல வெண்டலைப் புணரி ஆடியும்’-6 1 "களைகட் டதனொடு நேர் குறள் : 550 4 தந்: 882 : 2 2 புறம் , 61 : 2, 5 பதிற் : 71 : 2. 8 குறு: 178 - குறு, 144, 1, 2