பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199


'கள்ளுக நடுங்கும் கழுநீர் போலக் கண்ணகி கருங்கனும் மாதவி செங்கணும்' எனக் கூறினார் அடிகளார். எனவே, துயரத்தால் கண் நீலநிறம் பெறுமென்றும் அதற்குக் கருங்குவளையாம் நீலம் உவமையாகு மென்றும், மகிழ்ச்சியால் செந்நிறம் பெறுமென்றும் அதற்குச் செங்கழுநீர் உவமையாகுமென்றும் அறிய முடிகின்றது. நீல நிறம்பெற்ற நெய்தல் கருங்குவளையாம் நீலத்திலும் சிறப்பு குறைந்ததாகக் கருதப்பட்டது. 'பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்’2 -என்று ஐங்குறுநூறு தலைவனுக்கு உவமை கூற, அதற்கு உரை வகுத்தவர், "சிறப்புடைய கருங்குவளையுடனே சிறப்பிலாத நெய்தல் நிகர்க்கும் ஊரன்' என்றெழுதி நெய்தலினும் நீலம் சிறந்தது என்று காட்டினார். இந்நீலம் நீலத் தாமரை என்றும் வழங்கப்படும். இம்மலரால் கட்டிய மாலை நீலத்தார்' எனப்பட்டது. இதனை மன்னர் அணிந்தனர். முத்தொள்ளாயிரத்தில் ஒருசோழன், 'நிள் நீலத் தார் வளவன்' எனப்பட்டான். இந்தக் கருங்குவளை செங்கழு நீரிலும் சற்றுக்குறைவானதாகப் பேசப்படுவதும் உண்டு. ஆம்பல் குடும் பத் து நான்கு வகைப் பூக்களிலும் செங்கழு நீர் ஏற்றம் பெறுவதற்கு அதன் தேனும் ஒரு காரணமாகும். ஆம்பலைவிடக் குவளையில் தேன் அதிகம்; சுவையும் அதிகம். மகளிர் மார்பில் சந்தனக் குழம்பு, குங்குமக் குழம்பை அப்பி ஒப்பனை செய்துகொள்வர். குழம்பை எடுத்துப் பூசிக்கொள்ளச் செங்கழுநீர் இதழ்களைப் பயன்படுத்துவர். அதன் தடிப்பு அளவில் குழம்பைத் தடிப்பாகப் பூசிக்கொள்வராம். வெள்ளிலோத்திரம் என்று ஒரு பூ, உண்டு. அது காய்ந்து சருகானதும் மணக்கும். அச்சருகைக் குழம்பாக்கி மகளிர் பூசி மகிழ்வதைச் சீவகசிந்தாமணி

  • . வெள்ளி லோத்திரத்தின் பூப்பொருக்கு அரைத்த சாந்தின் காசறு குவளைக்காமர் அகவிதழ் பயிலம் அட்டிக் என்று

1. சிலம்பு : 5 ; 236, 287 3 மூத் 37 2 ஐங் : 204 உரை . . 4 .. 622 و . تيق . نتي "ي