பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

பறியாக் குவளையும் பூவாக் குவளையும் குவளைக்குப் பறியாக் குவளை' என்றொரு சிறப்பு உண்டு. குமரன் வாழும் குன்றுகளில் உள்ள கனைகR, அரியவை அவனுக்கு உரியவை என்பர். அச்சுனை கடவுட் கனை. எனப்படும். அச்சுனையிற் பூக்கும் பூக்களை மாந்தர் சூடுதற்குப் பறிக்காது விடுப்பர். அவை கடவுட்கு உரியனவாக விடப்படும். அவற்றைச் சூர் அர மகளிர் கொய்து மாலையாக்கி முருகனுக்கு அணிவிப்பராம். இதனால் இக்குவளை பறியாக் குவளை என ஒரு சிறப்பைப் பெற்றது. இக்குவளையைக் குமரக்கடவுள் விரும்பும் என்று ஒரு வழக்கு உண்டு. நன்னன் என்னும் வள்ளலைக் கண்டு பரிசுபெற்று வந்தோர் பரிசு பெறச் செல்வோர்க்கு வழிசொல்லி அனுப்பினர். செல்லும் வழியில் மலைவழியும் உண்டு. அம்மலைகளில் சுனையிருக்கும். அச்சுனையிற் பூத்த குவளை முருகனுக்கு விருப்பமானது. அதனை அறியாது தொட்டால் உங்கட்கு நடுங்கும் அளவு துன்பம் வரும். அத்துடன் அக்குவளை மலர்களைப் பறிக்கச் சூர் அர மகளிர் சுற்றுவர். அவராலும் துன்பம் நேரும். அதனால் மலை வழியில் நில்லாது விரைந்து நாட்டு வழி நோக்கிப் படர்க’ என்றனர். குவளையில் தெய்வம் விரும்புதலின் கடியவாகிய பூக்களைக் கிட்டினும்” என உரையில் விரித்துக் கூற இடந்தரும் மலைபடுகடாம் தரும் அடிகள் இவை: 'நிறையிதழ்க் குவளை கடி (கடிய)வி தொடினும் வரையர மகளிர் இருக்கை காணினும் உயிர்செல வெம்பிப் பணித்தலும் உரியிர்"2 இக்குவளை கோடைக் காலத்திலும் நீரில் பூத்து வாடாமல் இருக்கும் என்றொரு செய்தியைக் குறுந்தொகை, 1 கடவுள் கற்சுனை அடையிறக் தவிழ்ந்த பறியாக் குவளை மலர்' நற் 84 : 1. .ே 2. மல்ை : 189-191