பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207


மலை எனப்படும், இதுபோன்றே வெண்மை நிற எழிற்பொம்மை 'அல்லிப் பாவை’ எனப்பட்டது. சிலைவடிக்கும் கலைத்திறமையில் வல்லவன் ஒருவனால் செய்யப்பட்டு மேலும் ஒப்பனையுடன் விளங்குவதாக இவ்வல்லிப்பாவை பேசப்படும். இ இப்பாவை எழுந்து ஆடினால்அதன் அழகைஎன்னென்பது! இதனை உவமையாக்கி, "வல்லோன் தைஇய வரிவனப் புற்ற அல்லியம் பாவை ஆடுவனப் பேய் ப்ப 1 என்கின்றன. புற நானூற்று அடிகள். இத்தொடர்பிலேயேபெண்ணுருவும்ஆனுருவும் கொண்ட கோலமாக ஆடப்படும் கூத்து, அல்லிக் கூத்து’ எனப் பட்டது. இஃது 'அல்லியம்' அல்வித் தொகுதி” எனக் கூத்த நூல்கள் குறிக்கின்றன. இக்கூத்து கண்ணனால் ஆடப்பட்டது என்பர். ஆண் பெண் உருவத்தில் ஆடப்பட்டதால் அலிப்பேடு ஆட்டம்’ என்றொரு பெயரும் உண்டு. கண்ணன் தன்னை அழிக்க வந்த கஞ்சனை அழித்து ஆடியதாகவும் கதை சொல்வர். கூத்து இலக்கணத்தில் 11 வகை அகக்கூத்து உண்டு. அவற்றில் அல்லிக் கூத்து ஒன்று. அல்லி இவ்வாறு தன்பெயரைச் சூடித் தன் குடும்பத்தைக் கூத்துத் தமிழிலும் பங்குபெறச் செய்தது. இவ்வாறாக, ஆம்பல் குடும்பம் ஒரு முத்தமிழ்க் குடும்பம் என்றாகியது. அல்லிச் சோறும் ஆம்பல் அவியலும். ஆம்பல் குடும்பத்தில் மலர்களிலும், இதனைச் சேர்ந்த தாமரையிலும் நடுவில் உள்ளது பொகுட்டு அன்றோ? இப் பொகுட்டை நாட்டுப்புறமக்கள் அல்லி’ என்றே வழங்குவர். இதன் உள்ளே விதைகள் உருவாகின்றன. விதைகள் உருவாகின்றன என்பதோடு உணவும் சமைகின்றது என்று கூறலாம். ஆம், இப் பொகுட்டாம் அல்லி ஒருசமையற் கூடம். இவ்விதைகள் வெண்சிறு கடுகு என்னும் கசகசாவை நீரில் கெட்டியாகக் கலந்தது போன் 1. புறம் : 88 : 16, 17,