பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225


நீர்ப்பூவாகிய தாமரையின் பிறப்பிடம் சேறு. சேறு என்றால் நாறும் உணர்வு பலருக்கு வருவதுண்டு. சேற்றில் உழைப்பவன் வறுமைக் காற்றில் அடிபட்டுச் சோர்பவன். அவன் உண்மையாகப் போற்றப்படுகிறான் என்று கூற முடியாது. ஆனால், சேறுதான் சோறு தருகின்றது. "சேற்றில் முளைத்த செந்தாமரை' என்னும் தொடரில் தாழ்ந்த இடத்தில் பிறந்தும் உயர்ந்த பெருமை உடையது' என்னும் கருத்து இருப்பதுபோன்று படும். ஆனால், பண்டைச் சான்றோர் நற்குடிப்பிறப்பிற்கு உவமை கூறிய பாங்கு மகிழ்தற்குரியது, 'சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ் நூற்றிதழ் அலரி நிரைகண் டன்ன வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந்தோர்'1 -என்று சேற்றுப் பிறப்பு நற்குடிப் பிறப்பு என்று பாடிச் சேற்றை நற்குடி என்றனர். இதனைச் சேறு தாமரையாற் பெற்ற பேறு என்பதோடு தாமரை சேற்றால் பெற்ற பெருமை என்றும் கூறலாம். நீர்ப்பூவாகிய தாமரை Gs று இன்றி இல்லை. சேற்றில் பூவாத தாமரை என்றால் அது தாமரைப் பூவைக் குறிக்காது. தா 4.மரை என்று பிரிபட்டுத் தாவுகின்ற மானைக் குறிக்கும். அன்றித் திருமூலர், w - "சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரை பூவின்றிச் சூடான் புரிசடை யோனே’ என்று பாடியது போன்று தத்துவப்பொருளைத் தரும். அத்துடன் தலையில் உள்ள கங்கையைக் குறிக்கும். கதவு திறக்கும் காதலன் ஞாயிற்றின் ஒளிதான் ஞாலத்தின் உயிர். அவன் வானத்தில் ஒளி திறந்து வழி திறந்தால்தான் உயிர்கள் விழி திறக்கும். இது பொது என்றாலும், Tä 27, 1-4, 2 திருமந்: 258, ,料 15