பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227


இதுபோன்று தாமரையைப் பற்றிய வண்ணனைகள் இல்லாத் இலக்கியமே இல்லை எனலாம். இவ்வண்ணனை களால் சில உண்மைகளும் வெளிப்படுகின்றன. சீவக சிந்தாமணியில் ஒரு வண்ணனை. அதில் தாமரை "சொரி பனி முருக்க நைந்தும்' என்றுள்ளது. இது பணியால் தாமரை கருகும் என்ற கருத்தைக் காட்டுகிறது. தாமரை வண்ணனை இன்னும் சிறிது வளர்ந்தது மணிமேகலைக் காப்பியத்தில். இரண்டு அன்னங்கள்-சேவலும் பேடையும் குலவி விளையாடின. பேடை, பக்கத்தில் அலர்ந் திருந்த தாமரைமேல் ஏறிக்கொண்டது. மாலை நேரம், கதிரவன் மறைந்தான்; தாமரை கூம்பியது. '೨/TT# G#೧/ು அயர்ந்து விளையாடிய' தன்னுறு பேடையைத் தாமரை அடக்க” அந்தச் சேவல், மூடிய தாமரையைப் “பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏ' நிற்று. இவ்வண்ணனையால் தாமரை மிகப் பெரிய மலர் என்னும் கருத்து தெரிகின்றது. இன்றும் நாம் கண்ணால் கானும் தாமரையின் அளவு நமக்குத் தெரிகின்றது. முற்காலத்தில் இன்னும் வளமான தாமரை இருந்திருப்பினும் எத்துணை அளவு பெரிதாக இருக்கலாம் என்றும் நாம் அளவிட்டுக்கொள்ள முடியும். ஆனால், இன்று அன்னப்பறவை இல்லை. அதுபற்றி நமக்கு விவரம் தெரியாது. வாத்து வடிவம் என்பர். இந்த வண்ணனை கொண்டு பார்த்தால் பெரிய தாமரை கொள்ளும் அளவில் அன்னம் ஒரு சிறு பறவையாக இருந்திருக்கும் என்ற கருத்தைப் பெற முடிகின்றது. - • , தாமரையைப் பற்றிய வண்ணனை கற்பனையாகவும் கதையாகவும் பெருகிய அளவை எல்லையிடவே இயலாது. புராணங்கள் கதைத்திருப்பவை எந்த அளவில் மிகை என்று அறிகின்றோம். 1 மணி : 5 : 123-128