பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232


அரும் பொகுட்டு (தாமரை) அனைத்தே அண்ணல் கோவில்" எனப்பட்டது. கலைமகள், திருமகள் நான்முகன் ஆகியோர் தாமரைமேல் இடம்பெற்றமையால் தாமரை, கோவிலாகவே ஆயிற்று. - "தவளத் தாமரை தாது ஆர் கோயில்’2 -என்றும், 'நீந்தரும் புனலிடை நிவந்த தாமரை - எய்ந்தன கோயிலே எய்துவாள் என”8-என்றும் உவமை யாகவும் உருவகமாகவும் கோவில் தாமரையாயிற்று. - அடியவர் உளத்திலும் ஆண்டவன் இடம் பெறுவார் அன்றோ அந்நோக்கத்தில் அடியவர் உள்ளமும் கோவிலாகும். அந்தக் கோவிலையும் குமரகுருபரர், 'வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்கவென் வெள்ளை ~. (உள்ளத் - தண்டா மரைக்குத் தகாது கொலோ’4 -எனத் தன் வெள்ளை உள்ளத்தை வெண்டாமரை என்றார். இவ்வாறு தாமரை கடவுளர்க்கு ஆக்கப்படும்போதே மாந்தர் தொடர்பிலிருந்தும் விடுபடவில்லை என்பதையும் காண் கின்றோம். கடவுள் தங்கும் உள்ளக் கமலம் மட்டுமன்றிக் கருத்து தங்கும், . - "உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துள்ள தள்ளற் கரியஇருள் தள்ளுமால்' -என வள்ளுவர் திருக்குறள் என்னும் கதிரவன் உள்ளக் கமலத்தை மலர்த்துகின்றது. இதுபோன்று தாமரைக் கோவிலாக வளமான நிலமும் வண்ணிக்கப்பட்டதை, - - - . 'தண்ணங் கமலக் கோயில் பல சமைத்த மருதத் தச்சன்'6 -எனக் காணலாம். பரி திரட்டு : 8 குமரகுருபரர் தனிப்பாடல் கம்ப மீட்சிப்படலம் : 85 சகலகலாவல்லிமாலை : 1. . . . .' திரு. மா : குலபதிநாயனார் பாடல் மீனா பி த : 60