பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

- கடவுள் பிடிப்பும், மக்கள் விடுப்பும் - கடவுளரது உறுப்புகளையெல்லாம் தாமரையாகக்கொண்டு பாடியவர்களது எழுத்தாணி மாந்தர து உறுப்புகளையும் அவ்வாறு பாட எழுதுவதை மறுத்துவிடவில்லை, தலைவன் தலைவியது முகம் தாமரையாக வண்ணிக்கப்பட்டது. “தாமரைக் கண் புதைத்' ததைக் காண்கின்றோம். கைகள், மலர்ந்த செந்தாமரை: கன்னங்கள், செந்தாமரை இதழ்; "குளன் அணி தாமரைப் பாசு அரும்பு ஏய்க்கும் இளமுலை'2 அவ்வுறுப்பு இரண்டாக உள்ளதை, "கொப்பூழ் என்னும் நிலத்தில் முளைத்த மயிர் ஒழுக்கு என்னும் ஒரு தண்டில் - இரண்டு குவிந்த தாமரை”3 என்றும் காட்டினர். புற உறுப்புகளைப் போலவே, அக உறுப்பாம் நெஞ்சக் குலையையும் (இருதயம்) "தாமரை மொட்டு' எனக் கலிங்கத்துப் பரணி பாடியது. தாமரை இதழை ஒவ்வொன்றாக இட்டு 108 போற்றிக்குப் பயன் படுத்தியது போன்றே மாந்தர் வாழ்விலும் தாமரை இதழை விட்டாரல்லர். கமழும் சந்தனச் சாந்தையும் குங்குமக் குழம்பை யும் மைந்தரும் மகளிரும் பூசிக்கொள்வர். அவற்றைக் கையால் அள்ளிப் பூசார். 'ஈடு இல் சந்தனம் ஏந்து தாமரை தோடின் பயில்வினால் பூசினான்’5 '-- சாந்தைப் பூசிக்கொள்ளத் தாமரை இதழையோ குவளை இதழையோ கொண்டனர். அவற்றால் தோய்த்தெடுத்துப் பூசிக் களித்தனர். - - - 1. தவி : 89 : 2 2. கவி : 22 : 15, 18 . - 3. உந்திச் சழியில் முளைத்தெழுந்த உரோமப் பசுந்தாள் ஒன்றிரண்டு - அத்திக் கமலம் கொடு வகுவி' -கலி, ப : கடைதிறப்பு : 19 4 தாமரை மொட்டென்னும் உள்ளி (நெஞ்சக்குலை)" -கலி. பரணி *தாமரை மொட்டிற் செய்த தனிப்பெருஞ் சூட்டுக் கண்டிர்’ - -தக்க 744, 5 சிவ. சி : 2428 6 சிவ, சி : 322