பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252


கபிலரால் குறிக்கப்பட்டமையால் பாலைப் பூ உண்டு. இது பால் பிடித்த மரவகை. அலரிப் பூவிலும் பால் தென்படும். கட்டலரி' என்னும் பூ ஒருவகைப் பூ பாலை இனமாகச் செடியியல் அறிஞர்களால் குறிக்கப்படும். எனவே இது பால் பிடித்த பூ. மரத்தில் பூப்பதால் கோட்டுப் பூவகையைச் சேர்ந்தது. கிளையில் பல பிரிவாக ஆனால், கொத்தாகப் பூக்கும் வெண்மை நிறத்தில் பூக்கும்; இதனை, 'கொடிறு போல் காய வால் இனர்ப் பாலை” -என்றது நற்றினை (107) 'கோடு (கிளை) உறு பல்கால் வால் (வெண்மை) இணர்ப் பாலை' என்றும் ஒரு மேற்கோள் பாடல் காட்டுகின்றது. இவ்வகைப் பூ ஏழிலைப் பாலையின் பூவாகும். பிற பாலைகளின் பூக்கள் வெவ்வேறு நிறங்கள் கொண்டவை. கொடிறு என்னும் குறடு போன்ற காயும் இதற்குண்டு. தினைப் பூவான பாலை வெண்மை நிறத்தது என்று கொள்ள வேண்டும். இதன் பூ சிறியது. பிங்கல நிகண்டு சிவந்திக் கொடிக்கும் பாலை2 -என்று பெயர் சூட்டும். அது கொடி இது மரம். எனவே சிவந்தி என்னும் சீந்தில் இப்பாலை அன்று. சூடாப் பூ 球 இப்பூவைச் எவரும் சூடார். இது குடாப் பூவாகும். இப்பாலையைத் ஆடையாகக் கொள்வர் போலும். அது 'இலைகளால் ஆனது. அதனையும் மகளிர் உடுத்தியதாகச் செய்தி இல்லை. திருப்பரங்குன்று மலையைப் பெண்ணாக வண்ணிக்கும் பரிபாடல், க்தி-அற்ப 8 மேற்கோள் * "சைவத்தி சிவனிக்கடன் ,