பக்கம்:வாழ்க்கை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

121


இப்படிக் காண்பது உள்ளேயுள்ள உணர்ச்சியால் சாத்தியமாகிறது. இந்த உணர்ச்சியாவது தொடர்ச்சி அறாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து வருகிறதா? உறக்கத்தில் சில சமயங்களில் உணர்ச்சியே அற்றுப்போகிறது. தினந்தோறும் உறங்கும்போது உணர்ச்சியற்றும், விழிக்கும்போது அது புதுப்பிக்கப்பட்டும் வருகிறது. இந்த உணர்ச்சி நின்று போனதும், உடல் மடிந்து அழிவுறும் என்று தோன்றுகிறது. ஆனால், இயற்கையான உறக்கத்திலோ, செயற்கையாக மருந்துகளால் ஏற்படும் உறக்கத்திலோ, அப்படி நடப்பதில்லையே!

உணர்ச்சியும் ஒரேயடியா யில்லாமல் உடலைப் போல் மாறிக்கொண்டே வருகிறது. மூன்று வயதுக் குழந்தையா யிருந்தபோது நான் பெற்றிருந்த உணர்ச்சி அறவே மாறி, இப்போது வேறு புதிய உணர்ச்சியைப் பெற்றிருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னால் முற்றிலும் வேறான உணர்ச்சியை பெற்றிருந்தேன். எனவே, வாழ்க்கை முழுவதும் உணர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை; ஒன்றுக்கு மேலான பல உணர்ச்சிகள் வெவ்வேறு சமயங்களில் தோன்றியிருக்கின்றன.

ஆயினும், ‘நான்’ என்ற கருத்து என்றும் படித்தாக இருந்து வருகிறது. அடிக்கடி பாரி அழிந்து கொண்டும், வளர்ந்து கொண்டும் வரும் உடல் ‘நான்’ என்று கருத முடியாது. அடிக்கடி மாறிவரும் உணர்ச்சியும் அப்படிக் கருத முடியாது. பிறகு, ‘நான்’ என்று எப்போதுமுள்ள என் கருத்துக்குக் காரணமானது யாது? இது பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/128&oldid=1122350" இலிருந்து மீள்விக்கப்பட்டது