பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320


"தாருடைய மன்னர் தடமுடிமேல் தார் வன்றோ, பாமுறைதேர் வள்ளுவர்.முப் பால்' -எனத் தடமுடி மேல் தாரை உருவகப் பாங்கில் வைத்தார். இங்கு, பூவாகக் கூறாமல் தாராகக் கூறியது ஒரு மரபு அரசர்க்கு உரியவற்றை மரபுச் சின்னங்களாகக் கூறும் தொல்காப்பியர், - 'படையுங் சொடியுங் குடியும் முரசும் நடைநவில் புரவியுங் களிறும் தேரும் தாரும் முடியும் போல்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய' -என்றார், இப்பட்டியலில் பூ, தாராகக் குறிக்கப்பட்டது. எனவே பூந்தார் அரசர்க்கு உரிய மரபுப் பொருள்களுள் ஒன்று. பூவின் தார் என்றால் எப்பூவின் தார்? "தார் எனவே, போர்ப் பூவுந் தார்ப் பூவும் அடங்கும்'2 -என்றார் பேராசிரியர். போர்ப்பூ முன்னர் விளக்கப்பட்ட புறப் பூக்கள் எட்டும் ஆகும். அடுத்துத் தார்ப்பூ என்றார். அஃது அவரவர் குடிப் பூவைக் குறிக்கும். அதனைத் தார் என்னு ம் அடைமொழியோடு குறித்தது. குடிக்குரிய சின்னப் பூ தார்ப் பூ எனக் குறிக்கப்படும் சிறப்பை யுடையது என்பதைக் காட்டுகின்றது. முடிமன்னர் மூவர். அவர் சேர, சோழ, பாண்டியர். அவரவர்க்கு எவ்வெப் பூ உரியது? சேரனுக்குப் பணம் பூ; பாண்டியனுக்கு வேப்பம் பூ: சோழனுக்கு ஆர்ப் பூ. இவை அவரவர் குடியை அறிவிக்கும் சின்னம். எனவே, 'வேம்பும் ஆகும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னிய 8 ராக விளங்கினர். அவரவர் அவ் வப் பூவை அரச அறிகுறியாகத் தவறாமற் சூடிக்கொள்வர். அரசரன்றி மற்றவர் சூடலாமோ? ஏன் சூட வேண்டும்? எப்போது சூடுவர்? தொல்காப்பியர் விடை வைத்துள்ளார். - 1 தொல் : பொருள் : 626 2 தொல் பொருள் : 826 டிரை, 8 புற : 888 : 6, 1.